உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லுக்கு ஊக்கத்தொகை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லுக்கு ஊக்கத்தொகை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:குறைந்தபட்ச ஆதார விலையுடன், ஒரு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு 105; சன்ன ரக நெல்லுக்கு 130 ரூபாய் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கவும், அடுத்த நிதியாண்டில், ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு 2,500 ரூபாய் வழங்கவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நடப்பாண்டு காரீப் நெல் கொள்முதல் பருவத்திற்கு, ஆதார விலையுடன் ஊக்கத்தொகை வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.நடப்பாண்டு காரீப் கொள்முதல் பருவத்தில், தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.நெல் கொள்முதல், செப்., 1 முதல் மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில், காரீப் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு, 2,300; சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 2,320 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது.இத்துடன் சாதாரண நெல் குவிண்டாலுக்கு 105; சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 130 ரூபாய் கூடுதல் ஊக்கத் தொகையாக, தமிழக அரசின் நிதியில் இருந்து வழங்க, முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி விவசாயிகளிடம் இருந்து, சாதாரண நெல் குவிண்டால் 2,405; சன்ன ரக நெல் 2,450 ரூபாய் என கொள்முதல் செய்யப்படும். இந்த புதிய ஊக்கத்தொகை, செப்., 1 முதல் நடைமுறைக்கு வரும்.அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, அடுத்து வரும் 2025 - 26ம் ஆண்டில் சன்ன ரக நெல் குவிண்டால் 2,500 ரூபாய் என்ற வீதத்தில், விவசாயிகளுக்கு வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை