உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக காஸ் விலை அதிகரிப்பு

வணிக காஸ் விலை அதிகரிப்பு

சென்னை: பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்க்கு ஏற்ப, சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. நேற்று வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், வீட்டு சிலிண்டர் விலை மாற்றப்படாமல், 818.50 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டாக அதன் விலை மாற்றப்படாமல் உள்ளது. கடந்த மாதம் வணிக காஸ் சிலிண்டர், 1,959.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம் அதன் விலை 5.50 ரூபாய் உயர்ந்து, 1,965 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ