உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 'எம்.பி., தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். தமிழகம் போராடும்; வெல்லும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் பிறந்த நாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவதில்லை. ஆனால் கட்சியினர் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, அரசின் சாதனைகள், கட்சியின் கொள்கையை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பொது கூட்டங்களை நடத்துவார்கள். இந்த முறை எனது பிறந்த நாள் வேண்டுகோளாக கட்சியினருக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.

தொகுதி மறுசீரமைப்பு

இன்றைக்கு தமிழகம் உயிர் பிரச்னையாக மொழிப்போரையும், உரிமை பிரச்னையாக தொகுதி மறு சீரமைப்பையும் எதிர்கொண்டு இருக்கிறது. எனது உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது மாநிலத்தோட சுயமரியாதை, நமது சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்.

போராட்டம்

இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை துவங்க வேண்டும். இப்பொழுது கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்திருக்கிறது. இதைப் பார்த்த மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கிட்டே அதற்கான எல்லாம் முன்னெடுப்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், நமக்கான பணத்தை இன்னும் தரவில்லை.

ஏற்க மாட்டோம்!

இதே போல் தமிழகத்துக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று தான் சொல்கிறார்களே தவிர மற்ற மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நாம் கேட்கிறது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்தின தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள்.

தமிழகம் வெல்லும்

அப்படி நடந்தால் அதை தமிழகமும், தி.மு.க.,வும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழகத்திற்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழகம் போராடும். தமிழகம் வெல்லும். நன்றி வணக்கம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

SUBRAMANIAN P
பிப் 28, 2025 14:19

எத்தனை பிரிச்சாலும் முழு பங்கையும் இவரு குடும்பத்துக்கே கொடுத்துட்டா கம்முனு இருப்பாரு..


Kumar Kumzi
பிப் 28, 2025 13:37

ஓங்கோல் துண்டுசீட்டு விடியல் அப்பா 40/40 வச்சிட்டு என்னத்த கீச்ச சீனிசக்கர சித்தப்பூ


P.M.E.Raj
பிப் 28, 2025 13:27

தமிழக மக்களை எளிதில் ஏமாற்றிவிடமுடியும் என்பதை யாரோ எழுதி கொடுத்து அதையும் தப்பு தப்பாக வாசிக்கும் இவரை முதலமைச்சராக நினைக்கவே கஷ்டமாக உள்ளது.


தமிழ்வேள்
பிப் 28, 2025 13:05

த வெ க மாதிரி 120 மாவட்டம் அல்லது உங்கள் கட்சியை போல 70 மாவட்டங்களாக தொகுதிகளையும் பிரிக்கலாம். ஆனால் தமிழகம் மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டுவிடும் ..அது ஓகே வா ?


Vasudevan Krishnan
பிப் 28, 2025 12:25

தன்னை பற்றி தன் தொழிலை பற்றி தினமும் புலம்பி கொண்டு இருக்கார் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது பாராளுமன்ற சீட் குறைத்தால் என்ன ? அதிகம் செய்தல் என்ன ? மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது. அடிக்கிற கொள்ளை கைவைத்தால் ரொம்ப ரோஷம் வந்து அலறுகிறார்.


Madras Madra
பிப் 28, 2025 12:24

தொடர்ந்து எம்ஜிஆர் யிடம் தோற்று கொண்டே இருந்த காலத்தில் இவர் அப்பா மக்கள் கவனம் ஈர்க்க கலைஞர் தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் கொடுத்து தன் பத்திரிக்கையிலேயே போட்டு கொள்வார். அதா போல இவரே பிரச்சினை பண்ணி இவரே அதுக்கு தீர்வையும் சொல்லுறார் என்னே ஒரு காமெடி


Madras Madra
பிப் 28, 2025 12:18

இந்த எபிசொட் எத்தனை நாள் தங்கும்னு தெர்ல அதுக்குள்ள அடுத்த எபிசோடுக்கு கதை திரைக்கதை க்கு கன்டென்ட் வேற தேடணும் ஆட்சி பண்றது எவ்ளோ கஷ்டம் பா


Saai Sundharamurthy AVK
பிப் 28, 2025 12:17

கிணற்றுத் தவளைக்கு கிணறு தான் உலகமாம் !! தமிழ் இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கிறது.


sankar
பிப் 28, 2025 12:16

விஷ வித்துக்களை விதைத்துக்கொண்டே இருக்கும் விதூஷகர்


Anand
பிப் 28, 2025 12:01

தினமும் ஷூட்டிங் தானா? வீட்டிலேயே ஸ்டுடியோ உள்ளதா அல்லது ஏதாவது ஸ்டுடியோவில் அறை எடுத்து குடி புகுந்துள்ளாரா?