உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி

ரவுடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி

சென்னை:மாமல்லபுரம் அருகே போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சீர்காழி ரவுடி சத்யாவுக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் சத்யா, 40. ரவுடியான இவரை, கிழக்கு கடற்கரை அருகே, மாமல்லபுரம் போலீசார் சுட்டு பிடித்தனர். போலீசார் சுட்டத்தில் இடது காலில் காயம் ஏற்பட்ட சத்யா, தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.இந்நிலையில், சத்யாவின் தாயார் தமிழரசி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் என் மகனுக்கு, காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில், சத்யாவின் உடல்நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கவும், போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.போலீசார் எதிர்ப்பை ஏற்க மறுத்த நீதிபதிகள், சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தனர். டாக்டர்களின் அனுமதியோடு, சத்யாவை அவரது தாயார் மட்டும் பார்க்கவும் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை