உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1100 கோடி ஜி.எஸ்.டி., செலுத்த நோட்டீஸ்; நடவடிக்கையை எதிர்த்து மின்வாரியம் வழக்கு

ரூ.1100 கோடி ஜி.எஸ்.டி., செலுத்த நோட்டீஸ்; நடவடிக்கையை எதிர்த்து மின்வாரியம் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மின் வினியோகம் செய்ததற்காக, 2017 முதல் 2021 வரை, 1,100 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்துமாறு மின் தொடரமைப்பு கழகத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் மீதான விசாரணை நடவடிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் தொடரமைப்பு கழகம், ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரியாக, 2017 முதல் 2021ம் ஆண்டு வரையிலான நான்கு நிதியாண்டுகளுக்கு, 1,100 கோடி ரூபாய் செலுத்தும்படி, ஜி.எஸ்.டி., துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்த நோட்டீசை எதிர்த்து, தமிழக மின் தொடரமைப்பு கழகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மின் தொடரமைப்பு கழகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''ஜி.எஸ்.டி., முறை அமலுக்கு வரும் முன், மின் தொடரமைப்பு கழகத்துக்கு சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ஜி.எஸ்.டி., விதிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம்,'' என்றார்.அதை ஏற்ற நீதிபதி, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்பான நடவடிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்; விசாரணையை ஏப்ரல், 7க்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GMM
பிப் 22, 2025 07:47

ஜி.எஸ்.டி. வரும் முன் சேவை வரியில் இருந்து விலக்கு. வந்த பின் விலக்கு தானே கலாவதி ஆகிவிடும். ஜி.எஸ்.டி. பதிவு செய்து வரி பிடித்தம் செய்து இருக்க வேண்டும். வரி அனைத்து மாநிலங்கள் தேசத்திற்கு உரியது. 1100 கோடி ரூபாய் மின் வாரியம் டெபாசிட் செய்து வழக்கை தொடர வேண்டும். காகித உத்தரவிற்கு மதிப்பு இருக்காது.


Tetra
பிப் 22, 2025 21:09

இது கழக கண்மணிகளின் ந்யாலயம். ஒன்றும்‌ செய்ய‌ முடியாது. நீதிபதிகளுக்கும் சட்டம்‌புரியாது.


RAJA
பிப் 22, 2025 04:44

notice அனுப்பிய gst turaiku minsaram cut பண்ணுங்க


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 22, 2025 10:07

அணிலை மட்டும் அனுப்புங்க போதும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை