உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 சதவீத போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை

10 சதவீத போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'போக்சோ வழக்குகளில், 10 சதவீத குற்றவாளிகள் கூட தண்டிக்கப்படாததற்கு, தி.மு.க., அரசே பொறுப்பேற்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், 2015 முதல் 2022 வரை, 'போக்சோ' சட்டத்தின்படி, 21,672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், 2023 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; 30 சதவீத வழக்குகளில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, 12,170 வழக்குகள், அதாவது 60 சதவீத வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.போக்சோ வழக்குகளில், ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, போக்சோ வழக்குகள் தேங்கியுள்ளன. போதிய எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததும், புலன் விசாரணைகள் சரியாக மேற்கொள்ளப்படாததும் தான் காரணம். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் தப்பிவிடுவதால், அச்சம் குறைந்து குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவ வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், தேவையான போக்சோ நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mecca Shivan
மார் 05, 2025 06:57

நீதிமன்றங்களும் குற்றவாளிகக்ளுக்கு துணை போகும் போலீசும் அரசு வக்கீல்களும் ஒரு காரணம்


அப்பாவி
மார் 04, 2025 12:42

அந்தக்காலத்திலே மரம் வெட்டுனவங்களையே தண்டிக்க முடியலை.


seshadri
மார் 04, 2025 09:40

இங்கு எந்த அரசியல் வியாதியாவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா உமது மகன் அன்புமணி அவர்களையும் சேர்த்துதான் எழுதுகிறேன் நீங்கள் ஏன் இதை பற்றி பேசவில்லை


Nagarajan D
மார் 04, 2025 09:27

வடமாவட்டங்களில் 1980 களில் மரம்வெட்டி ரோட்டில் போட்டு அய்யோக்கியத்தனம் செய்தபோதே உங்களையும் உங்க கூட்டமும் கூட தான் தண்டிக்கப்படவில்லை... அன்றே உங்களை கடுமையான தண்டனை கொடுத்து தூக்கில் போட்டிருந்தால் நல்லா தான் இருந்திருக்கும்... உங்களையே தண்டிக்கவில்லை நீங்க என்னமோ பேசுற


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 04, 2025 09:05

சிக்குபவர்கள் பெரும்பாலும் சார்கள் ஆக இருக்காங்களே டாக்டர் ??


pandit
மார் 04, 2025 07:04

அப்பாவின் ஆசி


Svs Yaadum oore
மார் 04, 2025 07:02

போக்சோ வழக்குகளில், 10 சதவீத குற்றவாளிகள் கூட தண்டிக்கப் படவில்லையாம்.. மீதியெல்லாம் ராமசாமி திராவிடனுங்களாக இருப்பார்கள் .....


D.Ambujavalli
மார் 04, 2025 05:50

அதுதான் ஒரு கலெக்டரே மூன்றரை வயதுக் குழந்தை எச்சில் துப்பியதால்தான் ‘அவன்’ பாலியல் துன்புறுத்தினான் என்று நியாயப்படுத்திவிட்டாரே பிறகு போக்ஸோ சட்டம் எதற்கு, கோர்ட் எதற்கு?


முக்கிய வீடியோ