உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜியோ பெயரில் மோசடி; ஏமாறும் வாடிக்கையாளர்

ஜியோ பெயரில் மோசடி; ஏமாறும் வாடிக்கையாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : 'ஜியோ' மொபைல் போன் இணைப்புகளுக்கு, சலுகை விலையில் ரீ-சார்ஜ் என வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்யும் நபர்களிடம், பலரும் பணத்தை இழந்தனர்.'பேஸ்புக்'கில், ஜியோ நிறுவனம், தமிழக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையில் ரீ -சார்ஜ் வசதி வழங்குவதாக ஒரு விளம்பரம் பரவி வருகிறது. இதில் 2,999 ரூபாய் மதிப்பு ரீசார்ஜ், 499 ரூபாய், 1,009 ரீசார்ஜ் 249 ரூபாய், 666 ரூபாய் மதிப்பு ரீசார்ஜ், 199 ரூபாய் என அதிரடி சலுகை 80 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி. இச்சலுகை நீண்ட காலம் நீடிக்காது, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை நம்பிய பலருரும், ஜியோ நிறுவனத்தின் உண்மையான விளம்பரம் எனக் கருதி விடுகின்றனர். அதில் தெரிவித்துள்ள இணைப்பை தொட்டு உள்ளே நுழைந்து பணத்தை செலுத்துகின்றனர். ஆனால், பணம், தனி நபர் பெயரில் உள்ள வங்கி கணக்குக்குச் செல்கிறது. திருப்பூரில் இதுபோல் பணத்தை இழந்துள்ளனர்.அறிமுகமில்லாத, புதிய 'ஆப்'களில் இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு அதில் பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி, எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
செப் 05, 2024 05:54

ஆம். அந்த ப்ராடு வங்கி கணக்கு வைத்திருக்கும் ஆளுங்கள புடிக்கத் துப்பில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 09:35

தமிழகத்தில் மட்டுமே ஏமாந்துள்ளனர் ..... ரீசார்ஜ் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆப் தான் பயன்படுத்தவேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஏமாந்துள்ளனர் ....


R.RAMACHANDRAN
செப் 04, 2024 06:47

இந்த நாட்டில் இணைய தளம் மூலம் அரசாங்கத்திடம் அங்கீகாரம் பெறாமல் கொள்ளை அடிக்கின்றனர்.அரசு அமைப்புகள் இதனை அறிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.காலம் கடந்து மக்களை எச்சரிக்கை செய்கின்றனர்.மக்களும் எச்சரிக்கைகளை மீறி ஆசை காரணமாக பணத்தை இழக்கின்றனர்.


புதிய வீடியோ