மேலும் செய்திகள்
ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.21 லட்சம் கோடி ஆனது
29-Jun-2024
புதுடில்லி: எரிசக்தி மாற்று திட்டங்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் உற்பத்தி திட்டங்களில், அதானி குழுமம் அடுத்த பத்து ஆண்டுகளில் 8.34 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:ஆற்றல் மாற்றத்திற்கான மூலப்பொருட்கள் தயாரிப்பை விரிவுபடுத்த, பத்து ஆண்டுகளில் 8.34 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய உள்ளோம். ஆற்றல் மாற்றம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் லட்சக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் இந்தியா உள்நாடு மற்றும் உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இதன் வாயிலாக 30 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மேலும், வருகிற 2030ம் ஆண்டுக்குள் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சார உற்பத்தி 50 ஜிகா வாட்டாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
29-Jun-2024