மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
23-Feb-2025
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,065 ரூபாய்க்கும், சவரன், 64,520 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று காலை 9:30 மணிக்கு தங்கம் விலை கிராமுக்கு, 45 ரூபாய் குறைந்து, 8,020 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் சரிவடைந்து, 64,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 108 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் மதியம் 12:30 மணிக்கு தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 8,060 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, 64,480 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
23-Feb-2025