உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொய்வழக்கு போடுவதில் அரசு முனைப்பு; சீமான் குறித்த கேள்விக்கு அன்புமணி பதில்!

பொய்வழக்கு போடுவதில் அரசு முனைப்பு; சீமான் குறித்த கேள்விக்கு அன்புமணி பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு போடுவதில் அரசு முனைப்பு காட்டுகிறது என பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.சென்னையில் பாலியல் வழக்கில் சீமானிடம் விசாரணை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அன்புமணி அளித்த பதில்: அதாவது போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, கஞ்சாவை ஒழிப்பது, கள்ளச்சாராயத்தை ஒழிப்பது உள்ளிட்ட தனது வேலைகளில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் தனது வேலையை விட்டுவிட்டு, அரசியல் கட்சி தலைவர்களை துன்புறுத்துவது, பொய் வழக்குகள் போடுவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த மாதத்தில் மட்டும், எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து போலீசார், அவர்கள் தனிப்பட்ட விஷயம் என சொல்வது அசிங்கமாக இருக்கிறது. தமிழகத்தில், இதை யாராவது செய்தால் அவன் கதை முடிந்து போய்விட்டது என்ற பயத்தை போலீசார் உருவாக்க வேண்டும். நாங்கள் விவசாயிகள் பக்கம் இருக்கிறோம். விவசாயிகள் மட்டும் பாவப்பட்ட மக்களா? வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.65,000 கோடி ஒதுக்கலாம். நெல்லுக்கு ரூ.3500, கரும்புக்கு ரூ.5 ஆயிரம் கொள்முதல் விலை நிர்ணயிக்கலாம். நியாயவிலை கடைகளில் நாட்டுச் சர்க்கரை விநியோகிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajathi Rajan
மார் 01, 2025 20:09

அண்ணனும் சீமான் மாதிரி எதாவது ................... ?????


முருகன்
மார் 01, 2025 19:33

பொது மக்களுக்கு மட்டும் தான் சட்டம் இவர்கள் தவறு செய்தால் பொய் வழக்கு என பேசுவது சரியா


K.Ramakrishnan
மார் 01, 2025 18:21

சீமான் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்கிறார் இவர்.கோர்ட் உத்தரவின்படியே போலீஸ் செயல்பட்டது. என்னோடு விருப்பப்பட்டு உறவு வைத்தார் விஜயலட்சுமி என்று பொது வெளியில் பெண்களை உடன் வைத்துக் கொண்டு பேசுகிறார் சீமான். இதை அன்புமணி ஆதரிக்கிறாரா?பொத்தாம் பொதுவாக எல்லாவற்றிலும் அரசை பழி சுமத்துவதிலேயே இருக்கக்கூடாது.திமுக சார்பில் எம்.பி.பதவி தருகிறேன் என்றுஅறிவித்தால், அப்பாவும்,பிள்ளையும் யு டர்ன் அடித்து விடுவார்கள்.


Petchi Muthu
மார் 01, 2025 17:40

இவருக்கு வேற வேலை கிடையாது


madhes
மார் 01, 2025 17:39

சின்ன மங்காவின் மனைவிக்கு, சீமான் செஞ்சது பிடிக்குமா ? சின்ன மாங்காய் மக்களுக்கு சீமான் செஞ்சது பிடிக்குமா ?


Petchi Muthu
மார் 01, 2025 17:00

இது தெரிந்த விஷயம் தானே


சமீபத்திய செய்தி