உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹைடெக் பாலியல் தொழில் புரோக்கர் 20 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி

ஹைடெக் பாலியல் தொழில் புரோக்கர் 20 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி

சென்னை: பெங்களூருவில் பதுங்கி, மிகப்பெரிய 'நெட் ஒர்க்' அமைத்து, நட்சத்திர ஹோட்டல்களில் பாலியல் தொழில் செய்து வரும் முக்கிய புள்ளியை, போலீசார் தேடி வருகின்றனர்.

சிக்கினார்

சென்னை வேளச்சேரியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வள்ளுவர் கோட்டம், கே.கே.நகர், ஷெனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடக்கிறது. அதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது. வெளி மாநில பெண்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து, பாலியல் தொழில் புரோக்கர்களாக செயல்பட்ட, 13 பெண்களை கைது செய்தனர். பாலியல் தொழில் கும்பலுக்கு தலைவனாக இருந்த வெங்கடேசன் என்பவரும் சிக்கினார். ஜாமினில் வெளிவந்த பின், 20 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார். பெங்களூருவில் பதுங்கி இருக்கும் அவர், நட்சத்திர ஹோட்டல்கள், பண்ணை வீடுகளில் பாலியல் தொழில் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

நவீன தொழில்நுட்பம்

இது குறித்து, போலீசார் கூறியதாவது:பாலியல் தொழில் புரோக்கர்கள், 'டெலிகிராம்' செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் உள்ள, அதிநவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, அவர்களை கைது செய்ய முடியாத அளவுக்கு தப்பித்து வருகின்றனர். 'ஹைடெக்' பாலியல் தொழில் புரோக்கரான அவரை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !