உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவிலக்கு திருத்த மசோதா அமல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்த மசோதா அமல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய மதுவிலக்கு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது பூதாகரமான பிரச்னையாக மாறிய நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h83ign5x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மதுவிலக்கு திருத்தத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு,மதுவிலக்கு திருத்த மசோதா -2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.மேலும் பிணையில் (ஜாமினில் ) வெளியே வர முடியாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

வீரா
ஜூலை 14, 2024 08:45

ஏதாவது பிரச்சினை வந்தால் மட்டும் ஆயுள் தண்டனையை நீர்க்க செய்ய 75/80 வயதுக்காரர்களை சரணடைய செய்து 10 லட்சம் கட்டி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவார்கள். திமுக ஆட்சியை எதிர்க்கும் பத்திரிக்கையாளர் வீடுகளில் இனிமேல் கஞ்சா விற்கு பதில் கள்ள சாராய பாக்கெட்டுகளை காவல் துறையே வைத்து ஆட்சிக்கு வேண்டாதவர்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும். சாட்டை முருகனின் நாம் தமிழர் அரசியல் நமக்கு பிடிக்காது. ஆனால் அவரை கைது செய்து புதிய காரை திமுக ஐடி விங்கின் அடிமை காவலர்கள் உடைத்த விதம் எல்லோருக்கும் எரிச்சலை உருவாக்கியுள்ளது. மிசா காலத்தில் காங்கிரஸ் தனக்கு செய்ததை ஸ்டாலின் இப்போது மற்றவர்களுக்கு செயகிறார்.


Anantharaman Srinivasan
ஜூலை 13, 2024 23:11

ரூ.10 லட்சம் அபராதம் மட்டும் போதாது.கள்ளசாராயம் சாவு ஏற்பட்டால் வெறும் ஒரு லட்சம் போதாது. எத்தனை உயிர்கள் இழப்பு ஏற்படுகிறதோ அத்தனை பத்து லட்சம் வசூலிக்க வேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூலை 13, 2024 23:05

கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல்.. அதாவது பீப்பாய் அலுமினியம் mug. Plastic tumber. ஊறுகாய் பாட்டில்.


S. Narayanan
ஜூலை 13, 2024 22:18

திமுக ஆட்கள் கள்ள சாராயம் காய்ச்சினால் இந்த சட்டம் பொருந்தாது.


Kalyanaraman
ஜூலை 13, 2024 21:49

டாஸ்மாக்கில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்றால் என்ன தண்டனை?? பத்திரிகைகளுக்கும் அரசிடம் கேள்வி கேட்க முதுகெலும்பு இல்லை. நீதித்துறைக்கும் பல காலமாக எல்லோருக்கும் தெரிந்தது, நீதிபதிகளுக்கு தெரியாதா முதுகெலும்பில்லை என்ன செய்ய?


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 21:49

சிரிப்புத்தான் வருது. மதுவிலக்கு அமைச்சரின் முக்கிய வேலை டாஸ்மாக் மது விற்பனையை அதிகரிப்பது. பார் திறப்பது.


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 21:47

முதல் கையெழுத்து என்பது இதுதானா?


சூரியா
ஜூலை 13, 2024 21:01

கள்ளச்சாராய மரணத்திற்குத் தரப்படும் ₹10 லட்சம் ஊக்கத் தொகையையும் சட்டத்தில் நுழைத்துவிடலாமே!


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 13, 2024 20:40

அப்படீன்னா கள்ளச் சாராயம் குடிச்சு செத்தவனுக்கு கொடுத்த ரூபாய் பத்து லட்சத்தை திரும்ப வசூலித்து விடுவீர்களா?


Godyes
ஜூலை 13, 2024 20:21

குடிகாரன்கள் நெற்றியில் நாமம் போல் மூன்று டாஸ்மாக் மது பாட்டில்கள் உருவத்தை பச்ச குத்தலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை