உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்காப்பு கலைகளில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடி: கவர்னர் ரவி பெருமிதம்

தற்காப்பு கலைகளில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடி: கவர்னர் ரவி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''உலகில் உள்ள தற்காப்பு கலைகளுக்கு முன்னோடியாக நம் நாடு விளங்குகிறது,'' என, கவர்னர் ரவி பேசினார்.சென்னை கிண்டி, கவர்னர் மாளிகையில், 'எண்ணித் துணிக' பாரம்பரிய தற்காப்பு கலை ஆசான்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கவர்னர் ரவி பேசியதாவது:பாரம்பரிய தற்காப்பு கலை, நம் முன்னோர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமக்கு கற்றுத் தரப்பட்டது. தமிழ் கலாசாரம், தமிழ் பாரம்பரியம், கர்நாடக இசை, பரதநாட்டியம் போன்றவற்றுக்கு நாம் பெருமை கொள்வதை போல, நம் பாரம்பரிய தற்காப்பு கலைகளிலும் பெருமை கொள்ள வேண்டும். இந்த தற்காப்பு கலைகள், நம் ரிஷிகளால் நமக்கு தோற்றுவிக்கப்பட்டவை.இவை, தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ரிஷிகள், சித்தர்கள், ஆன்மிக முன்னோடிகள் அறிஞர்களாக மட்டுமின்றி, தற்காப்பு கலைகளிலும் சிறந்து விளங்கினர். அகத்திய முனிவர் கூட சிறந்த குருவாக இந்த கலைகளுக்கு விளங்கினார். உலகில் உள்ள பாரம்பரிய தற்காப்பு கலைகளுக்கு முன்னோடியாக நம் நாடு விளங்குகிறது.இக்கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு தோன்றியுள்ளன. சீனா, ஜப்பான், கொரியா என பல நாடுகளில் வெவ்வேறு வடிவில் தற்காப்பு கலைகள் உள்ளன. அவை அனைத்தும் இங்கிருந்து தான் சென்றன.கடந்த 1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவ வம்சத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் இங்கிருந்து சென்று புத்த மதத்தை படித்தவர். அவர் தான் போதி தர்மர். அவர், சீனாவுக்கு சென்றதும் சீன ராஜ்ஜியங்கள் வரவேற்றன. அங்கு அவர் இளம் மாணவர்களுக்கு தற்காப்பு கலையையும், புத்த மதத்தையும் போதித்தார். இந்த மண்ணில் இருந்து சென்ற போதி தர்மரை பற்றி ஷாவோலின் கோவில்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் பாரம்பரிய தற்காப்பு கலைகளை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து, பள்ளி, கல்லுாரிகளில் கற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் பொதுச்செயலர் கீதா, நிறுவனர் சுதாகரன், தமிழக குத்து வரிசை விளையாட்டு சங்க நிறுவனர் கழுகுமலை சந்திரசேகர், உலக சிலம்பம் விளையாட்டு சங்க செயல் இயக்குனர் சித்தர் துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

என்றும் இந்தியன்
ஜூலை 07, 2024 17:51

இந்திய அல்ல கவர்னர் அவர்களே திருட்டு திராவிடம் தான் முன்னோடி. பண்றது பூரா கொலை கொள்ளை ஊழல் ஆனால் தன்னை தற்காத்துக்கொள்ளும் கலைகளில் இன்னொருவர் மேல் குற்றம் சொல்லி தப்பிப்பது இது தானே தற்காப்பு கலைகளில் முதன்மையான கலை டாஸ்மாக்கினாட்டு மடியல் அரசின் ஆட்சியில்


தீனா
ஜூலை 07, 2024 16:25

உண்மை. கராத்தே இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு சென்றது. கரம் என்றால் கை. தே என்றால் ஓட்டுவது. எதிரியை வெறுங்கையால் ஓட்டுவது என்று பொருள்.


அப்புசாமி
ஜூலை 07, 2024 16:23

துப்பாக்கியெல்லாம் உதவாது. முதுகிலே அரிவாளை வெச்சுக்கிட்டு போவோம்.


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 09:50

ஏடுகளை கண்டால் அழித்து விடக்கூட தயங்காத திராவிடர்களை வைத்துக்கொண்டு இந்த அரை நூற்ராண்டில் அழித்தவை ஏராளம். சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஏடுகள் சரியாக பராமரிப்பது கூட கிடையாது. அள்ளிக்கொண்டு போன வெள்ளைக்காரன் இன்னும் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்கிறார். தமிழகத்தில் கடவுள் இல்லை என்று கம்பிகள் சொல்லித்திரிகிறார்கள் - ஆனால் செர்னில் சிவபெருமானின் சிலை வைத்து இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 07, 2024 07:43

சரிதான் ஆனால் நாம் பின்பற்றிய ஐரோப்பியர்களிடமும் எதிர்பார்த்து ஏமாந்தோமே.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி