உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை:'சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:சவுதி அரேபியா நாட்டில், 'டெலிகாம் புராஜெக்டில்' பணிபுரிய, 'ஆட்டோ கேட், சேல்ஸ் இன்ஜினியர், சைட் சூப்பர்வைசர், மைக்ரோவேவ் டெக்னீசியன், இன்பில்டிங் சொல்யூசன், பைபர் ஆப்டிக் டெக்னீசியன், அரபிக் இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேட்டர்' போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். பணிகளுக்கு ஏற்ப, 41,000 முதல், 80,000 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.விருப்பமுள்ள ஆண்கள், gmail.comஎன்ற 'இ - மெயில்' முகவரிக்கு, சுய விபரப் படிவம், கல்வி, பணி அனுபவச் சான்று, பாஸ்போர்ட் நகலை, வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, www.omcmanpower.tn.gov.in வலைதளம், 044 - 2250 2267, 95662 39685 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !