உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கே.ஜே.ஜேசுதாஸ் நலமாக உள்ளார்

கே.ஜே.ஜேசுதாஸ் நலமாக உள்ளார்

சென்னை:பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ், 85. இவர், 80,000க்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார். வயது மூப்பால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதை, ஜேசுதாசின் உதவியாளர் சேது இயாள் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:கே.ஜே.ஜேசுதாஸ் அமெரிக்காவில் நலமுடன் உள்ளார். அவர், உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருவதாக தமிழகத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன. அவற்றில் உண்மை இல்லை. அவர் பூரண நலத்துடன், நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் கேட்டுக் கொண்டதால், மக்களுக்கு இதை தெரியப்படுத்துகிறோம். இவ்வாறு சேது இயாள் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி