உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது: இ.பி.எஸ்

2026 தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது: இ.பி.எஸ்

சென்னை: 2026 தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது என தேர்தல் முடிவு குறித்து அதிமுக பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவித்து உள்ளார். அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது: அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கு மற்றும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. மக்களவை தேர்தல் முடிவு அதிமுகவை சோர்வடைய செய்யாது. அதிமுகவின் உழைப்பு தியாகத்தை எண்ணி கண் கலங்குகிறேன். அதிமுகவினரின் உழைப்பு தியாகத்திற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். அதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடைபோட உறுதி ஏற்கிறேன் .2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ram
ஜூன் 05, 2024 15:10

தோல்வி விரக்தியில் நிறையபேர் எதோ சொல்லி கொண்டுள்ளீர்கள், இங்கு BJP எதிர்ப்பு வோட்டுகளை DMK அள்ளியுள்ளது கவனிக்கவேணடும் இன்னும் பிஜேபி இங்கு முழுதளவும் மக்கள் ஏற்கவில்லை, BJP கூட்டணி இருந்தால் இன்னும் எட்டமுடியாத ஓட்டு எண்ணிக்கை DMK வெற்றி பெற்று இருக்கும் அதும் டெபொசிட் கிடைத்திருக்காது,


ram
ஜூன் 05, 2024 12:26

எடப்பாடி கட்சியை விட்டு நீக்கி விடலாம் இல்லையென்றால் MGR Amma வளர்த்த கட்சியை வித்து விடுவார் திருட்டு திமுகவிடம். தலைமைக்கு சசிகலா அவர்கள் பெஸ்ட்.


Google
ஜூன் 04, 2024 22:35

நீங்கள் செய்ய வேண்டியது இந்த கச்சியை விட்டு போவதுதான்.


Kumar Kumzi
ஜூன் 04, 2024 22:27

ஓ பன்னீர்செல்வத்தின் வெற்றியை கெடுத்தவரும் தீமுகாவின் கைக்கூலி இவரு தான்


Balaji Gopalan
ஜூன் 04, 2024 22:07

அய்யா எட்டப்பரே , நீங்க செய்த காரியம் அதிமுக விசுவாசிகளான என்னை போன்றவர்களால் ஜீரணிக்க முடிய வில்லை . என்ன காரணத்திற்காக தனியாக போட்டியிட்டு திமுகவை ஜெயிக்க வைத்தீர்கள் .. எங்கள் தலைவர் mgr மற்றும் அம்மா வழியில் நீங்கள் கட்சி நடத்த முடியவில்லை என்றால் பதவி விலகி செல்லுங்கள் . அதிமுக என்பது தொண்டர்கள் கட்சி உன்போன்ற எட்டப்பர் கட்சி அல்ல .. அம்மா ஆன்மா உன்னை சும்மா விடாது


R.MURALIKRISHNAN
ஜூன் 04, 2024 21:30

நீங்கள் ஏமாற்றியது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அதிமுக தொண்டர்களை எடப்பாடி அவர்களே, நீங்களும் ஸ்டாலினின் பி டீம் அவ்வளவே


Ramesh Sargam
ஜூன் 04, 2024 21:25

இவ்வளவு அடிபட்டு, மீண்டும் 2026 தேர்தலை எதிர்கொள்ள நினைக்கிறீர்களா...??? கிழிஞ்சது கிருஷ்ணகிரி... பேசாம ஊர்ப்பக்கம் போய் விவசாயம் பண்ணி மானத்துடன், மரியாதையுடன், குடும்பத்துடன் வாழப்பாருங்கள்.


Kasimani Baskaran
ஜூன் 04, 2024 21:25

பங்காளிகளை அன்புடன் வெற்றிபெற விட்டு தியாகியாகி இருக்கிறார் எடப்பர். அதற்க்கு என்ன பிரதிபலன் பெற்றார் என்பது போகப்போகத்தான் தெரியும்.


sridhar
ஜூன் 04, 2024 20:44

இந்த படிப்பினை முன்பு நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலிலும் கிடைத்தது , என்ன பிரயோஜனம்


GMM
ஜூன் 04, 2024 20:20

MGR, ஜெயா தேடிய சொத்து. ஒரு உறுப்பினர் கூடசேர்க்கவில்லை.? 2 கோடி என்று பொய். MLA, MP தேர்தலில் திமுக வெற்றிக்கு முழு உதவி. பதவி ஆசையில் தனித்து போட்டி. 2026ல் 2 கேடி தான் இருப்பர். கட்சி பாழ்.?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை