தேசிய கல்வி கொள்கையை வலியுறுத்த கூடாது
சென்னை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக் ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு வழங்காதது குறித்து, முதல்வர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சரும், தமிழக எம்.பி.,க்களும், அந்த துறை மத்திய அமைச்சரை சந்தித்துள்ளனர்.மீண்டும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்துவது, மாநில கொள்கைகளுக்கு எதிரானது. கல்வி என்பது அந்தந்த மாநில மக்களுக்கு என்ன தேவை என்பதை, மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.