உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பவுர்ணமி கிரிவலம்: தி.மலைக்கு சிறப்பு ரயில்

பவுர்ணமி கிரிவலம்: தி.மலைக்கு சிறப்பு ரயில்

சென்னை : பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு, இன்று பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரத்தில் இருந்து இன்று காலை 9:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், 11:00 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் திருவண்ணாமலையில் இருந்து இன்று நண்பகல் 12:40க்கு புறப்படும் பயணியர் சிறப்பு ரயில், மதியம் 2:15 மணிக்கு விழுப்புரம் செல்லும் விழுப்புரத்தில் இருந்து இன்று இரவு 9:15க்கு புறப்படும் பயணியர் சிறப்பு ரயில், இரவு 10:45க்கு திருவண்ணாமலை செல்லும் திருவண்ணாமலையில் இருந்து நாளை அதிகாலை 3:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அதிகாலை 5:00 மணிக்கு விழுப்புரம் செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது. இதேபோல, பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு, 550 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை