உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி., அமலாக்க அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம்

ஜி.எஸ்.டி., அமலாக்க அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம்

மதுரை: 'ஜி.எஸ்.டி., அமலாக்க அதிகாரிகளுக்கு வரி, வட்டி, அபராதம் விதிக்கும் அதிகாரம் இருப்பது ஆபத்தானது,' என, மதுரை வேளாண்மை மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.மாநில ஜி.எஸ்.டி., வரியின் (எஸ்.ஜி.எஸ்.டி.) குழப்பமான அமலாக்கத்தினால் தமிழகத்தில் தொழில் வணிகத்துறையினர் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்வதாக சங்கத்தலைவர் ரத்தினவேலு, செயலாளர் திருப்பதிராஜன், பொருளாளர் ரவிக்குமார் தெரிவித்தனர்.இதுகுறித்து மதுரையில் அவர்கள் கூறியதாவது: எளிதாக வணிகம் செய்யும் சூழலை உருவாக்க ஜி.எஸ்.டி., வரியின் குழப்பமான அமலாக்கம் தவிர்க்கப்பட வேண்டும். வாகன சோதனை, வரி விடுதலுக்கான நோட்டீஸ் தயாரிப்பது, வரி மதிப்பீடு போன்ற நடவடிக்கைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.சரக்கு வாகனங்கள் செல்லும் போது டிரைவர் மட்டும் வாகனத்தில் பயணிப்பார். இரவில் வாகனத்தை நிறுத்தச்சொல்லி ஆய்வு செய்யும் போது பில்லும் சரக்கு போக்குவரத்திற்கான இ வே பில்லும் தான் டிரைவர் கையில் இருக்கும். ஆவணங்களில் லாரி பதிவு எண் தவறுதலாக குறிப்பிடப்பட்டாலோ, சற்று தாமதமாக வந்தால் கூட பில்லில் உள்ள வரித்தொகையைப் போல் இரு மடங்கு அபராதம் உடனே செலுத்தாவிட்டால் சரக்கைப் பறிமுதல் செய்வதாக அலுவலர்கள் வணிகர்களை அச்சுறுத்துகின்றனர்.ஆய்வு செய்யும் இடத்திலேயே அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். வாகன சோதனை செய்யும் ஜி.எஸ்.டி., அமலாக்க அதிகாரிகளுக்கு வரி, வட்டி, அபராதம் விதிக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. ஆவணங்களில் உள்ள பிழையை அதிகாரிகள் குறிப்பிட்டு சரக்கின் உரிமையாளருக்கு டிரைவர் மூலமாக ஆய்வறிக்கை கொடுத்து வாகனம் செல்ல அனுமதிக்க வேண்டும். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த வணிகரின் வரிவிதிப்பு அதிகாரிக்கு அந்த ஆவணத்தை அனுப்பி நோட்டீஸ் மூலம் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.2019 மே 31 ல் அப்போதைய வணிகவரி கமிஷனர் சோமநாதன் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்து பழைய முறையை கொண்டு வரவேண்டும்.ஆன்லைன் போர்ட்டலில் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., வரி ரிட்டர்ன் சமர்ப்பித்து வரி செலுத்துகின்றனர். தொழில் வணிகம் செய்வோர் வரிவிதிப்பு அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து தவறு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கணக்கு முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்து 'உள்ளீட்டு வரி எடுக்க தகுதியானவை அல்ல' என முரண்பாடு என்னவென்று கூட குறிப்பிடாமல் வரிவிதிப்பு அதிகாரிகள் வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதற்கு வரி ஆலோசகர்கள் மூலம் பதில் கொடுப்பதற்கு நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. கணக்கு முடித்த இரண்டாண்டுகளுக்குள் அதிகாரிகள் ஆடிட் செய்து முடிக்க வேண்டும்.ஜி.எஸ்.டி., வரிச்சட்டத்தின் கீழ் எந்தப்பொருளுக்கு என்ன வரி என்பதில் குழப்பங்கள் உள்ளன. உலகளவில் ஒவ்வொரு பொருளுக்கும் எச்.எஸ்.ன்., குறியீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வரி விதிக்கும் போது 21 பிரிவுகள் அடிப்படையில் பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும். ஒரு பிரிவில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே வரி விதிக்கவேண்டும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வகைப்படுத்தும் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் ஜி.எஸ்.டி. வரிச் சட்டத்திலும் வரம்புகளை உயர்த்தவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
பிப் 22, 2025 05:30

எனது நிறுவனத்திற்கு ₹20 கோடிக்கு நோட்டீஸ் விடப்பட்டது. நான் கொடுத்த பதில்களை ஆராய்ந்து கடைசியில் எப்படி முடிவு செய்வது என்று தெரியாமல். கணக்கு புத்தகம் இல்லை என்று ₹40000 அபராதம் மட்டும் மாநில அரசு விதித்துள்ளது. கொடுமையிலும் கொடுமை


சமீபத்திய செய்தி