உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு பயிற்சி

குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு பயிற்சி

சென்னை:குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஊக்கத்தொகையுடன் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற, இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம்.சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இம்மாதம் முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்களுக்கு, முதன்மை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகையாக 25,000 ரூபாய் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், இன்று காலை 6:00 முதல் நாளை மாலை 6:00 மணி வரை, www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். தேர்வானவர்கள் விபரம், நாளை இரவு 7:00 மணிக்கு, இணையதளத்தில் வெளியிடப்பட்டு அடுத்த இரண்டு நாட்களில் சேர்க்கை நடைபெறும். வரும் 8ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை