உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு; துப்பாக்கியால் எச்சரித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு; துப்பாக்கியால் எச்சரித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் எச்சரித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.நேற்று முன்தினம் (ஜூலை 6) ராமேஸ்வரத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், வழக்கம்போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.அங்கு ரோந்துக்கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் தங்கள் பகுதி எனக்கூறி துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் கைதுக்கு பயந்த மீனவர்கள், கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்து புறப்பட்டனர்.பின் இந்திய எல்லைப்பகுதியில் மீன் பிடித்த நிலையில் பெரும்பாலான படகுகளுக்கு மீன்வரத்து இன்றி தொழில் நஷ்டத்துடன் நேற்று காலை கரை திரும்பியுள்ளனர்.இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்பட்டு கைதாகும் நிலையில், தற்போது இலங்கை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்தது மீனவர்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூலை 08, 2024 09:22

. தற்போது ராமேஸ்வரம் பகுதியில் இருக்கும் மீனவர்கள் வெளி வட்டாரம், மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அன்றைய மீனவர்களுக்கு இந்திய எல்லை தெரியும் எனவே அதை தாண்டி வலை வீசமாட்டார்கள். இன்று பணத்திற்காக மீன் குஞ்சுகளை வேட்டையாடி நமது காலா பகுதியில் மீன்வளம் இல்லாமல் செய்துவிட்டனர். இது யார் தப்பு . இலங்கை ராணுவத்தினர் செய்வது சரிதான். இலங்கையிலும் தமிழ் பேசும் மீனவர்கள்தான் உள்ளனர். அவர்களும் வாழவேண்டும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ