உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க; செய்தியாளர்களிடம் கேட்கிறார் ராமதாஸ்

எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க; செய்தியாளர்களிடம் கேட்கிறார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: 'எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க' என பேட்டிக்கு வந்த செய்தியாளர்களிடம் ஜாலி கோரிக்கை வைத்தார் பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் டாக்டர் ராமதாஸ். அப்போது செய்தியாளர் ஒருவர், 'ராஜ்யசபா எம்.பி., சீட் காலியாகிறதே... பா.ம.க., ஏதாவது கோரிக்கை வைத்துள்ளதா' என கேள்வி எழுப்பினார். இதற்கு, 'வைக்கலாம் போல் இருக்கிறதே. நீங்கள் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க' என சிரித்தபடி தெரிவித்தார் ராமதாஸ்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oquf4imn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு செய்தியாளர், 'யாரிடம் சிபாரிசு செய்ய வேண்டும்' என கேட்டதற்கு, 'ரகசியமாக சொல்கிறேன். ஆனால், தி.மு.க.,விடம் கேட்க மாட்டோம்' என்றார் ராமதாஸ். மேலும் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் அளித்த பேட்டி: தமிழர்களின் தொன்மை கால நாகரிகம் தொடர்பான புத்தகத்தை அவருக்கு (தர்மேந்திர பிரதான்) கொடுக்க வேண்டும். அந்த புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது. அதனை படித்த பிறகு நான் சொன்னது தவறு என்று அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்களுக்கு பாராட்டுகள்.தமிழகத்தில் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,450 கொள்முதல் விலை வழங்க வேண்டும். மகளிர் உரிமை தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 13, 2025 23:29

ஆசை இருக்கு தாசில் பண்ண .... ஆனால் ....


sankaranarayanan
மார் 13, 2025 21:12

இவர் தைலாபுரத்து பிரதமர்! அவரே படஜெட் போடுவார் .அவர்தான் பிரதமர். புள்ளையாண்டாந்தான் நிதி அமைச்சர். தைலாபுரத்து மக்கள் தொகை கணக்கெடுத்தால் நாலுபேர்தான் இருப்பர்கள்.அப்பன் புள்ளையாண்டான் மனைவி மருமகள் இவர்களுக்கு ஒரு பட்ஜெட்.


SUBBU,MADURAI
மார் 14, 2025 03:47

இவனைப் போல் ஓரு பெரும் பேராசைக்காரன் இந்த உலகில் இருக்க முடியாது.


M Ramachandran
மார் 13, 2025 20:51

மரம் வெட்டி கிழத்திற்கு இன்னும் நப்பாசை.


தாமரை மலர்கிறது
மார் 13, 2025 20:16

ஏன் மரம் வெட்டவா?


MARUTHU PANDIAR
மார் 13, 2025 19:33

நானோ ,என் குடும்பத்தினரோ அரசியலில் பதவிக்கு ஆசைப்பட மாட்டோம், அப்படி பதவியை பெற்றால் என்னை -அதாங்க மிச்சத்தை ஞாபகம் நல்லா இருக்கறவங்க இட்டு நிரப்பிக்கலாம் .


தேவராஜன்
மார் 13, 2025 18:52

மரம் வெட்டுகிற சமூகப் பணி காலியாக இருக்கிறது. நான் வேண்டுமானால் சிபாரிசு செய்யட்டுமா?


S.L.Narasimman
மார் 13, 2025 17:45

அதற்கு நன்றியோடு இருக்கனும்.


S.V.Srinivasan
மார் 13, 2025 16:01

என்னதான் மருத்துவர் ஐயா கதிரானாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. அது சரி, பெண்களோ, ஆண்களோ, உழைத்து சம்பாதிக்க சொல்ல எந்த அரசியல் வாந்தியும் முன் வர மாட்டேன்ட்க்ராங்கப்பா. பசித்தவனுக்கு மீனை கொடுக்காதீங்க, மீன் பிடிக்க கற்று கொடுங்க.


Anvar
மார் 13, 2025 15:17

கருணை டும்பத்தை எங்கள் நிராகரித்தீர்களா


Kanns
மார் 13, 2025 15:05

Shameless Selfish Blot Goondaism Opportunism in TN Democracy


புதிய வீடியோ