ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.21 லட்சம் கோடி ஆனது
மும்பை,:'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம், ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்து, 21 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.இதையடுத்து, 21 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. தொலைதொடர்பு வணிகத்தில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ, நேற்று முன்தினம் அதன் ரீசார்ஜ் கட்டணங்களை, 13 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தது. மாற்றியமைக்கப்பட்ட இந்த கட்டணங்கள், வரும் ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இம்முடிவை அடுத்து, நேற்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை, 2 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரித்தன.நேற்று வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை, 2.19 சதவீதம் உயர்ந்து, 3,128 ரூபாயாக இருந்தது.