உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணை கட்டிப்போட்டவர் திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ்

பெண்ணை கட்டிப்போட்டவர் திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ்

சென்னை:மஹாராஷ்டிரா மாநிலத்தின் வனப்பகுதியில், பெண்ணை சங்கிலியால் கட்டிப் போட்டு தப்பிய முன்னாள் கணவர், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம், சோனுர்லி கிராம வனப்பகுதியில், இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, உயிருக்கு போராடிய லலிதா கேயி என்ற பெண்ணை, போலீசார் மீட்டனர். மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்ட இப்பெண், கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லலிதா கேயியின் உடைமைகளை, போலீசார் சோதனை செய்தபோது, அமெரிக்க பாஸ்போர்ட், தமிழக முகவரி உடைய ஆதார் அட்டை இருந்தது. விசா காலம் முடிந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, லலிதா கேயி, இந்தியாவில் தங்கி இருப்பது தெரிய வந்தது. இவர், போலீசாரிடம்எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தன் முன்னாள் கணவர், இரும்புச் சங்கிலியால் வனப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்து, தப்பி விட்டதாக கூறி உள்ளார்.இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநில போலீசார், தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில், லலிதா கேயியின் முன்னாள் கணவர், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில், லலிதா கேயியுடன் சதீஷ் குடும்பம் நடத்தியது தொடர்பான விபரங்களை, போலீசார் சேகரித்துள்ளனர். சதீஷ் மீது, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை