உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அ.தி.மு.க.வுக்கு ஐ.ஜே.கே., ஆதரவு

 அ.தி.மு.க.வுக்கு ஐ.ஜே.கே., ஆதரவு

சென்னை: இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதாக, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் காலியாக உள்ள, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு, வரும் அக்., 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு, ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தரை, அ.தி.மு.க., நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஐ.ஜே.கே., ஆதரவு அளிக்கும். அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, ஐ.ஜே.கே.,வினர் தேர்தல் பணியாற்றி, அவர்களை வெற்றி பெற வைப்பர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ