உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து

தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து

கோவை: கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு தமிழறிஞர்கள், 'தமிழகத்துக்கு மும்மொழி தேவை' என, கருத்து தெரிவித்தனர்.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், உலக தாய்மொழி தினம், கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லுாரி அரங்கில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில், தமிழ் மொழி சார்ந்து ஆய்வுப்பணிகளை செய்து வரும், மொழியியல் அறிஞர்களுக்கு இந்நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த தமிழ் ஆய்வுப் பணிக்கான விருது பெற்ற இந்த தமிழறிஞர்களிடம், மும்மொழி திட்டம் பற்றி கேட்ட போது, வரவேற்று பதில் அளித்தனர்.

எந்த பாதிப்பும் வராது

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலிஞ்சான் முருகைய்யா கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள், தமிழ்மொழியை மறந்து விட்டனர். தமிழ் பண்பாட்டை மட்டும் நினைவில் வைத்துள்ளனர்.தமிழகத்திலும் தமிழ் மொழி வளர்ச்சி அடையவில்லை.நம் தாய்மொழியான தமிழை கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால், இன்றைய காலத்துக்கு அது மட்டும் போதாது. பிறமொழிகளையும் கற்றுக்கொள்வது அவசியம். மத்திய அரசு வலியுறுத்தும், மும்மொழி திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்று. இன்னொரு மொழியை படிப்பதால், நம் மொழிக்கு எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு அவர் கூறினார்.லண்டனைச் சேர்ந்த செல்லத்தம்பி சிறீகந்தராசா கூறியதாவது: வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு, தமிழால் எந்த பயனுமில்லை. லண்டனில் உள்ள என் மகன், மகளுக்கு தமிழ் நன்றாக தெரியும். அதனால் அவர்களுக்கு பொருளாதாரம் சார்ந்து எந்த பயனுமில்லை. பிரெஞ்சு, ஜெர்மன், சீன மொழிகளை கற்றுக்கொண்டால் நல்ல பலன் உண்டு.பிற்காலத்தில் அந்த நாட்டின் உயர் பதவிகளுக்கு கூட வரலாம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி திட்டம் தேவை தான். இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதால் தவறில்லை. நமக்கு தேசத்தோடு, ஒரு தொடர்பு மொழி தேவை. மற்ற மாநிலங்களில் வேலை வேண்டும் என்றால், ஹிந்தியோ வேறு மொழியோ அவசியம் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சிங்கப்பூரைச் சேர்ந்த பிச்சினிக்காடு இளங்கோ கூறியதாவது: சிங்கப்பூரில், தமிழ் மொழி சிறப்பாக வளர்ந்துள்ளது. சிங்கப்பூர் அரசு, தமிழ் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்கிறது. அங்குள்ள தமிழர்கள், சிங்கப்பூர் மொழியை நன்றாக கற்றுக்கொண்டு உரையாடுகின்றனர். தமிழகத்தில் இப்போது மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. விரும்பினால் கற்றுக் கொள்ளலாம். பிற மாநிலங்களில் தமிழ் மொழியை பாடமாக கற்றுக் கொடுத்தால், இங்கும் நாம் அந்த மொழியை, பாடமாக கற்றுக்கொள்வதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

குழப்பம்

அதே நிகழ்ச்சியில், அவர்களுக்கு பின் பேசிய, தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், 'தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழி போராட்டத்தை துவங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதளித்த தமிழறிஞர்கள், மும்மொழி திட்டத்தை வரவேற்று பேசிய அதே நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் முரணாக பேசியது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை குழப்பமடையச் செய்தது.

விருது பெற்றவர்கள்

லண்டனைச் சேர்ந்த செல்லத்தம்பி சிறீகந்தராசாவுக்கு, உலக தமிழ்ச்சங்க இலக்கண விருதும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலிஞ்சான் முருகைய்யாவுக்கு உலக தமிழ்ச் சங்க மொழியியல் விருதும், சிங்கப்பூரைச் சேர்ந்த பிச்சினிக்காடு இளங்கோவுக்கு, உலக தமிழ்ச்சங்க இலக்கிய விருதும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Venkataraman
பிப் 23, 2025 12:52

யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் இங்குள்ள பிரிவினைவாத திமுகவினர். இந்த அரசை கலைத்து விட்டு ஊழல் அமைச்சர்கள் அனைவரையும் சிறையில் தள்ள வேண்டும்


அப்பாவி
பிப் 23, 2025 12:48

சிங்கப்பூரில் இரண்டு மொழிகள்தான் பற்றுவிக்கப் படுகிறது. ஃரான்சிலும், இங்கிலாந்திலும் அதே கதைதான். இவிங்க நாட்டில்.இல்லாததை இங்கே சிபாரிசு செய்யறாங்க.


Indhuindian
பிப் 23, 2025 12:43

விவேக் காமெடி- நான் படிக்கவே லம். உன்னோட புள்ளை குட்டிங்க- நானே படிக்கலை அவங்க ஏன் படிக்குனும் படிச்ச மதிக்க மாட்டாங்க- உன் பேர புள்ளைங்க இல்லே பசங்கள் மதிக்கலேன்னா எப்படி பேர பசங்க மதிப்பாங்க அவங்களும் படிக்கலை மாடு மேய்க்கறாங்க - நான் படிக்கலை மத்தவங்க படிச்சா எப்பிடி எனக்கு வோட்டு போடுவாங்க


Indhuindian
பிப் 23, 2025 12:41

செவிடன் காதில் வூதிய சங்கு


Ramesh Sargam
பிப் 23, 2025 12:34

தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான். அதே சமயம் தமிழகத்துக்கு அந்த ஓங்கோல் குடும்பத்தினர் தேவையில்லை. இது எல்லா சான்றோர்களின் கருத்து. GET OUT STATLIN.


Perumal Pillai
பிப் 23, 2025 12:10

ஹிந்தி வேண்டும். நான் ஹிந்தி படிக்க வேண்டாம் என சொல்ல இவர் யாரு ?


sankaranarayanan
பிப் 23, 2025 11:42

தான் நன்றாக படிக்கவில்லை அரசியலில் இளவயதில் குதித்து ஆதாயம் தேடிக்கொண்டவர்கள் கல்வியைப்பற்றி பேசவே கூடாது கல்வி விற்பன்னர்கள் அறிஞர்கள் மேதைகள் கட்சிசார்பாற்ற இவர்களை கூட்டி பேசினால் தெரியும் மும்மொழிக்கொள்கையின் மிக மிக அவசியம் என்ன என்று இளவயதில் மும்மொழிகளை மாணவ மாணவியர்கள் படிப்பதை கெடுக்காதீர்கள் அவர்கள் வாழ்வை சிதைக்காதீர்கள் அவர்களுக்கு பிடித்தமான மொழியை அவர்களே தேர்தெடுக்கட்டும் சுதத்ந்திரம் கொடுங்கள் மூன்றாவது மொழி எந்த ஒரு இந்திய மொழியாகவாவது இருக்கலாம் என்றபோது இவர்களுக்கு ஏனிந்த சந்தேகம் பித்தலாட்டம் இதனால் நீண்ட காலத்தில் பாதிக்கப்படுவது நன் நாட்டின் இளைஞர்கள் இவர்கள் அல்ல


E
பிப் 23, 2025 11:36

First make tamil a absolute priority in all schools


Ambedkumar
பிப் 23, 2025 10:02

The people of Tamil Nadu have no inherent opposition to learning additional languages. Rather, political parties have turned this into a contentious issue. These political parties should not have the authority to dictate whether Tamil Nadu residents can learn additional languages. This decision rightfully belongs to the citizens themselves. The government should conduct an honest survey to understand the publics views on this matter. If the people express a desire to learn additional languages, it becomes the governments responsibility to provide the necessary educational infrastructure and support to facilitate this learning.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:54

இலங்கை, கனடிய, ஆஸ்திரேலிய தமிழறிஞர்கள் கருணாநிதியை ஒரு தமிழறிஞராகவே ஏற்பதில்லை.. அவரது நூல்களை குப்பை என்று ஒதுக்கியவர்கள்.. நாம்தான் முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவர் என்றேல்லாம் அவரைக் கொண்டாடுகிறோம் ......


முக்கிய வீடியோ