உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்ஜெட் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு: சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு!

பட்ஜெட் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு: சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு!

சென்னை: சென்னை: சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக சட்டசபை இன்று (மார்ச் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், 'இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழகம். பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்' என்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o59ctike&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:

* 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.* ஒலைச்சுவடிகள் பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு.* தமிழக பாடநூல் கழகத்திற்கு ரூ.120 லட்சம் ஒதுக்கீடு* சென்னைக்கு அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு* தமிழர்கள் அதிகம் வசிக்கும் டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு.* மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.* 193 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.* ஆண்டுதோறும் உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும்.* தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு * ஊரக பகுதிகளில் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.*2,329 கிராமங்களில் ரூ.1,887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.*ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள்*ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள். 29.74 லட்சம் பேர் பயனடைவர்.*ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்.*கொருக்குப்பேட்டையில் ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம்*வேளச்சேரியில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் உருவாக்கப்படும்.

8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள்

* சிவகங்கை- கீழடி* சேலம்- தெலுங்கனூர்* கோவை- வெள்ளலூர்* கள்ளக்குறிச்சி- ஆதிச்சனூர்* கடலூர்- மணிக்கொல்லை* தென்காசி- கரிவலம்வந்தநல்லூர்* தூத்துக்குடி- பட்டணமருதூர்* நாகப்பட்டினம்அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026ல் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது; அன்று இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பின், புதிய அரசு பொறுப்பேற்ற பின், முழு பட்ஜெட் தாக்கல் செய்யும். எனவே இது தி.மு.க., அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

936 இடங்களில் ஒளிபரப்பு

சென்னை மாநகராட்சியில் 100 இடங்கள்; மற்ற 24 மாநகராட்சிகளில் 48 இடங்கள்; 137 நகராட்சிகளில் 274 இடங்கள், மாநிலம் முழுதும் 425 பேரூராட்சிகள் என, மொத்தம் 936 இடங்களில், சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது ஒளிபரப்பு செய்யப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, ரயில், பஸ் நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அமளி

இதற்கிடையே அ.தி.மு.க.,வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 89 )

Matt P
மார் 20, 2025 22:56

சென்னைக்கு அருகில் தான் புதிய நகரை அறிவிக்க வேண்டுமா? ராமநாதபுரம் மாவட்டத்திலோ வேறு மாவட்டத்திலோ சிறிய ஊரில் ஏற்படுத்தலாமே. சிறிய ஊரில் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்ப்படும். தமிழ்நாட்டின் மக்களின் வாழ்க்கை மேம்படும். சுகாதாரத்துக்கு வழி வகுக்கும். போக்குவரத்து நெரிசல் குறையும். சென்னையில் மேலும் ரௌடிகள் உருவாகி கொலை நகரமாக மாறி மேலும் சீரழியலாம். இந்த தொழில் நுட்ப காலத்தில் வேறு விதமாக சிந்தியுங்கள். வெளி மாவட்டங்களையும் கொஞ்சம் உற்றுப்பாருங்கள். புதிய நகரம் ஏற்படும்போது அங்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்த பாருங்கள்.


RAAJ68
மார் 14, 2025 23:14

வணக்கம்! விற்கும் பானிபூரிக்காக லோலோ என்று அலைவது நீங்கள் தானே.அவனை ஊக்கி வைப்பதை நீங்கள் தானே தெருவுக்கு தெரு கூட்டம் கூட்டமாக நின்று வாங்கி கொட்டிப்பதற்கு ஏன் தவம் கிடக்கிறீர்கள்.


தாமரை மலர்கிறது
மார் 14, 2025 23:13

தமிழகத்தில் வெட்டிச்செலவாகும் இரண்டு துறைகளை மூட வேண்டும். ஒன்று அறநிலை துறை. இரண்டு தொல்லியியல் துறை. இரண்டும் வெட்டிவேலை.


Balasubramanian
மார் 14, 2025 21:57

திருக்குறள் மொழி பெயர்ப்பு இருக்கட்டும்! 234 உறுப்பினர்களில் எத்தனை நபர்களுக்கு திருக்குறளில் இருந்து ஏதேனும் இரண்டு திருக்குறளை எடுத்து தந்தால் Random Basis அதற்கு பொருள் சொல்லத் தெரியும்? தெரியவில்லை என்றால் பதவி விலகத் தயாரா?


sankaranarayanan
மார் 14, 2025 21:18

சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள் ஏனிப்படி நல்ல நாள் பார்த்து வெள்ளிக்கிழமை மாசியும் பங்குனி சேரும் காலத்தில் பத்தினி பெண்கள் காரடையான் நோம்பு இருக்கும் இந்நாளில் ராகு காலம் பார்த்து காலை 9-30மணிக்கு பட்ஜெட் அறிவிக்க வேண்டும் அப்போ சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு என்பதை தெளிவாகவே சொல்லி விட்டார்கள் ஏன் இன்று காலை 11-மணிக்கு அறிவிக்கக்கூடாதா அல்லது நாளை சனிக்கிழமை காலை 9-30 மணிக்கு அறிவிக்கக்கூடாதா மக்களே தெரிந்துகொள்ளுங்கள்


தமிழன்
மார் 14, 2025 21:07

இருக்கிற ரோட்டையே சரி பண்ண தெரியல இதுல வேற புதுசு புதுசா ஏதோ பண்றாங்களாம் எல்லாம் மானக்கேடு இவர்களை நம்பி ஓட்டளித்த தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.


KRISHNAN R
மார் 14, 2025 20:41

Real எஸ்டேட் தவிர வேறு எதுவும் மூன்று ஒன்று தான்


pandit
மார் 14, 2025 20:26

G square வளர்ச்சி பட்ஜெட்.


spr
மார் 14, 2025 19:41

மொழி என்ற ஒரு கருவிக்காக எத்தனை செலவுகள். அப்படியாவது தமிழைப் பரப்ப பயிற்சிப்பள்ளிகளை உருவாக்கினார்களா என்றால் அதுவுமில்லை. மொழிக்கான செலவு என்றால் கணக்கு காட்டவே முடியாது. கொள்ளையடிப்பதற்கு இதைவிட சிறந்த வழியில்லை .இருக்கும் நகரமே இன்னும் வசதிகளின்றித் திண்டாடுகையில் பெருநகர உருவாக்கம் அவசியமா ? அப்படி உருவாக்கினால் பெரிய வணிக நிலையங்களை அங்கே நகர்த்த வழியுண்டா?அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சில மத்திய அரசின் உதவியால் நிறைவேற வேண்டிய நிலையில் பட்ஜெட் ஒரு அறிவிப்பு மட்டுமே...


தத்வமசி
மார் 14, 2025 19:40

துணை நகரம் அறிவிக்கப் பட்டுள்ளது. துணை நகரம் வருகிறதோ இல்லையோ, அந்த பகுதியில் நிலத்தின் விலைவாசி எகிறி விடும். அடுத்த தேர்தலுக்குள் அள்ளு தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை