உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது தமிழகத்தின் உரிமை; கவுரவம் பார்க்காதீங்க; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

இது தமிழகத்தின் உரிமை; கவுரவம் பார்க்காதீங்க; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

நாகை: 'வரும் மார்ச் 5ம் தேதி நாம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். இவர்கள் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று கவுரவம் பார்க்கதீங்க' என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க நாகை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தி.மு.க., நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வருகிற 5ம் தேதி நாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பெரும்பாலும் கட்சியினர் வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் நாங்கள் வர வாய்ப்பு இல்லை, வர முடியாது என்றும் செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். நான் அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, வர முடியாது, வர இயலாது என்று சொல்லி இருப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இது தனிப்பட்ட பிரச்னை அல்ல. இது தனிப்பட்ட கட்சி சார்ந்தது அல்ல. இதனை அரசியலாக பார்க்காமல், தமிழகத்தின் உரிமைக்காக என்பதை உணர்ந்து முடிவெடுங்கள். தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தால் தான் நாம் உரிமையை மீட்க முடியும். எனவே, அனைவரும் கவுரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று நினைக்காதீர்கள். இது தமிழகத்தின் பிரச்னை, நம்ம உரிமைகள் பறிபோகும் பிரச்னை, அரசியலாக பார்க்காமல் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

இதையடுத்து, நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசியல் வேறுபாடுகளை ஓரம் வையுங்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழின் தனித்துவம் சிலரது கண்களை உறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் அறிவித்த திட்டங்கள்!

நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் விபரம் பின்வருமாறு: தி.மு.க., ஆட்சியில் நாகை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. நாகையில் 13 பாலங்கள் கட்டபட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. * விழுந்தமாவடி, வானமாகாதேவி ரூ.12 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளங்கள் அமைக்கப்படும்.* நாகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.* வேதாரண்யம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பணி நடைபெறுகிறது. * நாகை நகராட்சி கட்டடம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கப்படும். * சென்னை நங்கநல்லூரில், ரூ.65 கோடியில் ஹஜ் பயண இல்லம் கட்டப்படும். * நாகையில் ரூ.250 கோடி புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 80 )

Matt P
மார் 08, 2025 13:39

ஹஜ் பயண இல்லம் நங்கநல்லூரில் அரசு பணத்தில் கட்டுகிறார்கள். தவறில்லை தான். இந்துக்கள் கோயிலில் போடும் உண்டியல் பணத்திலாவது அறநிலையத்துறை மூலமாக அவர்களுக்கும் பயண இல்லங்கள் கட்டலாமே. இந்துக்களும் தான் பயணங்கள் போகிறார்கள். எல்லா மதமும் சம்மதமே என்று ஆட்சி இருக்க வேண்டும்.


Narayanan
மார் 05, 2025 16:45

பொதுமக்களின் உரிமை . தயைசெய்து மதுக்கடைகளை உடனே மூடவும் . ஏற்றிய சொத்துவரி , மின்சாரக்கட்டணம் , பதிவுக்கட்டணம் . பேருந்துகட்டணம், பெண்களுக்கான சலுகைகள் இவற்றை உங்களின் கௌரவம் பார்க்காமல் நீங்கள் ஆட்சிக்கு வரும் முன் இருந்த நிலைக்கு கொண்டுசெல்லுங்கள்


Rajasekar Jayaraman
மார் 04, 2025 05:27

நீங்கள் 40 பேரும் கேன்டீனில் கிழிப்பது தான் அதிகம் மஹா கேவலம்.


xyzabc
மார் 04, 2025 02:05

வறட்டு கவுரவம் அதிகமாகி கொண்டு இருக்கிறது தமிழகத்தில் . காது செவிடு ஆகி விடும் சீக்கிரம்.


MARUTHU PANDIAR
மார் 03, 2025 22:22

தமிழு நாடு இருக்கிற இடம் இந்தியா இல்லீங்க ம், அது எங்கோ உக்ரைன் , கிரீன்லாந்து , சைபீரியா பக்கம் இல்லிங்கோ ?


MARUTHU PANDIAR
மார் 03, 2025 22:20

அய்யகோ ,தாங்க முடியலடா சாமி ,,இப்படியே விட்டால் கொஞ்ச நாளுல இங்க அவனவன் மெண்டல் ஆயிடுவான் போல இருக்கே


தாமரை மலர்கிறது
மார் 03, 2025 22:10

ஸ்டாலின் கூப்பிட்டு யார் போனாலும், கூடவே ரைடும் வரும். போனால் மாட்டிக்குவிங்க. போகாதீங்க.


metturaan
மார் 03, 2025 21:38

தமிழன போல ஒரு மறதி.... எந்த மாநிலத்திலும் இல்ல.... வேங்கை வயல் தொடங்கி எல்லா பிரச்சினைகளையும் மொழிமேல பழியைகிளப்பி எவ்வளவு லாவகமாக கையாண்டு இருக்காங்க ‌... சும்மா சொல்ல கூடாது... சூப்பர் அரசியல் வியாதி...சாரி அரசியல்வாதிங்க


Anbuselvan
மார் 03, 2025 21:24

இல்லாத ஒன்றை இருப்பதை போலவும் நடக்காத ஒன்றை நடத்தது விட்டது அல்லது நடக்க போகிறது என்றும் இது வரை தமிழக மக்களைத்தான் ஏமாற்றி வந்தார்கள். இப்போது அரசியல் கட்சிகளையும் ஏமாற்ற தொடங்கி விட்டனர். இவர்கள் கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என முதலில் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும். அரசியல் சாசனப்படி பொதுவாக மக்கள் தொகை அடிப்படையில் லோக் சபா சீட்டுகள் வரையறுக்கப் பட வேண்டும் என்றும் ஆனால் அப்படிதான் நடக்க வேண்டும் என கட்டாயம் இல்லை என்றும் கூறப் பட்டு இருக்கிறது. இப்போதைக்கு 550 சீட்டுகள்தான் அதிக பட்சம் என உள்ளது. எனவே சீட்டுக்களை கூடுதல் செய்வதற்கு அரசியல் சாசனம் திருத்தப் பட வேண்டும். அதற்கு NDA விடம் மேஜாரிட்டி இல்லை. அது மட்டும் இல்லை மக்கள் தொகை ஆறு கோடிக்கு மேல் உள்ள மாநிலங்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப சீட் ஒதுக்கப் பட வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டு ARTICLE 81. இதையெல்லாம் நன்கு படித்து விட்டு தங்களது நீதி ஆலோசகர்களை கேட்டு விட்டு கட்சிகள் இந்த கூட்டத்திற்கு போக வேண்டும் என முடிவு செய்தால் - அவர்கள் கட்டாயமாக வேறு ஏதோ காரணத்திற்குதான் அதாவது மத்திய அரசின் மீது வீண் பழி போடவே செல்கிறது என அர்த்தம்.


V RAMASWAMY
மார் 03, 2025 19:44

நாகையில் சுத்தம் சுகாதாரம் இவற்றை கவனித்தாரா? ஈக்களும், கொசுக்களும், சாக்கடைகளும் நிரம்பிய இந்த மாவட்ட தலைநகரை இன்னும் மேம்படுத்த எதுவும் செய்யக்கூடாதா? சரித்திர புகழ் வாய்ந்த இந்த தலைசிறந்த ஊர் கேட்பாரற்று கிடைக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை