| ADDED : ஜூன் 12, 2024 12:46 AM
மடிப்பாக்கம், மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம், முத்தியால் ரெட்டி தெருவை சேர்ந்தவர் கவுதம். ஆடிட்டர். இவருடைய இரு மகன்களும் ஆதம்பாக்கம், தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.நேற்று முன்தினம் மதியம் 2.00 மணி அளவில் கவுதம் மொபைல் போனுக்கு ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டார். கவுதமின் மகனை கடத்தி வைத்துள்ளதாகவும், விடுவிக்க 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் மர்மநபர் கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த கவுதம், உடனடியாக பள்ளிக்கு சென்றார். அங்கே இரு மகன்களும் வகுப்பறையில் இருந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து கவுதம் தன்னை மிரட்டிய நபர், பேசிய மொபைல் எண் குறித்த விவரங்களுடன், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்படி, மர்ம நபர் பேசிய மொபைல் எண் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தபோது, போலீசார் விசாரணையில், சட்டீஸ்கர் மாநிலம், ராய்பூரிலிருந்து மர்ம நபர் மிரட்டியது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.