உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யு.ஜி.சி., புதிய விதிகளை திரும்பப்பெறணும்: மத்திய அரசுக்கு கோவி செழியன் வலியுறுத்தல்

யு.ஜி.சி., புதிய விதிகளை திரும்பப்பெறணும்: மத்திய அரசுக்கு கோவி செழியன் வலியுறுத்தல்

சென்னை: யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வலியுறுத்தி உள்ளார்.கடந்த ஜன.6ம் தேதி வெளியான யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகள் மாநில உரிமைகளை பறிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டினார். அவரது பேட்டி:மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் யு.ஜி.சி.,யின் புதிய விதிமுறைகள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே கல்வித்துறையில் முழு உரிமை உள்ளது.யு.ஜி.சி., மூலம் மாநில பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சிக்கிறது. அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு இடைஞ்சல்களை மத்திய அரசு கொடுக்கிறது. யு.ஜி.சி., புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும்.மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அந்த மாநில மாணவர்களுடைய கல்வி சார்ந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக தான் இதுவரை செயல்பட்டு கொண்டு வந்திருக்கிறது. அதை தடுப்பதற்காக தான் பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். 'நாங்கள் சொன்னதை நீங்கள் செய்ய வேண்டும்' என்று திணிக்கக் கூடிய கருத்ததாகத்தான் யு.ஜி.சி., யின் வரைவு இருக்கிறது. ஆகவே யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு கோவி. செழியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Murugesan
ஜன 28, 2025 21:47

திராவிட அயோக்கியனுங்க அழிக்க படவேண்டிய நேரம் நாட்டை சீரழித்த கேடுகெட்ட கேவலமான திருடனுங்க,


Ramesh Sargam
ஜன 28, 2025 20:05

மத்திய அரசு எந்தவொரு திட்டம் கொண்டுவந்தாலும், எந்தவொரு செயலை நிறைவேற்றினாலும், அதை எதிர்க்கவேண்டும் என்கிற ஒரே மனப்பான்மையில் திமுக அரசு செயல்படுகிறது. மாநில அரசாக இவர்கள் மாநிலத்தில் உள்ள வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள். மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்ப்பார்கள். என்ன ஜென்மங்க இவர்கள்...?


Kanakala Subbudu
ஜன 28, 2025 19:49

அவரே சொல்லிட்டாரா அப்போ மத்திய அரசு கேட்டுத்தான் ஆகணும். இல்லை என்றால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்று ஒரு கும்பல் கூவும்


சமீபத்திய செய்தி