உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கை வயல் விவகாரம்; குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

வேங்கை வயல் விவகாரம்; குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில், 2022 டிசம்பரில் ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=khcsakk0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ், வெள்ளனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டது. விசாரணை முடிந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, 32, சுதர்சன், 20 மற்றும் முத்துகிருஷ்ணன், 22, ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஊராட்சி தலைவரின் கணவரை பழி தீர்க்கும் நோக்கத்துடன் இவர்கள் மூவரும், மனிதக்கழிவை குடிநீர் தொட்டியில் கலந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து மூவரும் தலைமறைவாகி விட்டனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களே குற்றத்தை செய்திருப்பது உறுதியான நிலையில், வழக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் தலைமறைவாக இருந்த முரளிராஜா, சுதர்சன், மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் இன்று வழக்கறிஞர்களுடன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிபதிகளின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

rasaa
மார் 12, 2025 10:55

என்ன திருமா இது. கடைசியில் உங்கள் ஆட்களையே பலி கொடுத்து விட்டீர்களே. என்ன செய்வது? பெட்டி பெரிதா? இந்த சில்லரைகள் பெரிதா என பார்த்தால் .... பெட்டிதான் பெரிது.


mdg mdg
மார் 11, 2025 17:56

ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை சிக்கு வைப்பதற்காக இந்த காரியத்தை செய்த அந்த மூன்று குற்றவாளையும் பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுமோ அதே தண்டனை இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதிலிருந்து பார்க்கும்பொழுது வன்கொடுமை என்பது எந்த சமூகத்தில் இருந்து புறப்படுகிறது என்பது தொல்லை திருமாவளவன் அறிவாரா?


Srinivasan Ramabhadran
மார் 11, 2025 16:38

Arranged marriage


Venkatesan Ramasamay
மார் 11, 2025 15:47

எங்கே அந்த பிளாஸ்டிக் chair ... பிரியாணிவளவன் ...


நாகராஜன்,சிலைமான்
மார் 11, 2025 21:47

தன் இன மக்களை காட்டி கொடுத்து தேர்தலில் வென்ற திருமாவளவன் திமுகவின் இந்த செயலுக்கு முட்டுக் கொடுப்பதற்கு வெட்கி தலை குனிய வேண்டும்


Srinivasan Krishnamoorthi
மார் 11, 2025 14:24

சாதி சண்டையை இவ்வாறு சமாளிப்பது அரசியல் கட்சிகளுக்கு வழக்கம் தான். திருநெல்வேலி ஏரியா என்றால் சமாளிக்கவே முடியாது. ராம்நாதபுறம் புதுக்கோட்டை பகுதியில் சாத்தியம். தஞ்சாவூர் பகுதியில் வழக்கே பதிவாகியிருக்காது. அரியலூர் வட்டாரம் சில கொலைகள் நடந்து அவையும் மறக்கப்பட்டிருக்கும் ஆற்காட் வட்டாரம் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது திருவள்ளூர் மற்றும் சென்னை பலவகை சார்பு பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கும் கொங்கு மண்டலம் முழுவதும் மேல் மட்டம் மேலாக நடந்து கொண்டு எள்ளோரையும் ஆதரித்து செல்வார்கள் அவர்களுக்குள் பனிப்போர் நிலவும் 30 ஆண்டு கால அலசல்


சின்ன சுடலை ஈர வெங்காயம்
மார் 11, 2025 13:26

திருமா எங்கே?


Anand
மார் 11, 2025 16:30

அவன் தற்சமயம் கூலிக்கு மாரடித்துக்கொண்டிருக்கிறான்...


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 11, 2025 12:50

அரேஞ்ச் செய்யப்பட்டவர்கள் தைரியமாக ஆஜராவாங்க... நாங்க இருக்கோம்ல ன்னு தெம்பூட்டியிருப்பாங்க ....


Ramesh Sargam
மார் 11, 2025 12:27

இதுபோன்ற தீய எண்ணம் கொண்டவர்களுக்கு எந்த வக்கீலும் அவர்கள் வழக்கை எடுத்து வாதாடக்கூடாது. ஆனால் நம் நாட்டில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் குற்றவாளிகளும் அவர்கள் தரப்பு வாதத்தை வைக்கலாம், வழக்கறிஞரை வைத்து வழக்கை நடத்தலாம் என்று சட்டத்திலேயே அவர்களுக்கு ஒரு சலுகை இருக்கிறது.


Anand
மார் 11, 2025 12:02

தன்னோட குடும்பமும், சமூகமும் அந்த தண்ணீரை தான் பருகுவார்கள் என தெரிந்தும் இந்த செயலை செய்த ... மிகவும் கேவலமான எண்ணம் கொண்ட ஜந்துக்கள்... இவர்கள் மனித இனமே இல்லை...


Pandi Muni
மார் 11, 2025 13:00

எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு அவனவன் வீட்டு கூரைக்கு தானே தீ வைப்பானா?


sankar
மார் 11, 2025 11:55

உண்மை ஆண்டவனுக்கே வெளிச்சம்


சமீபத்திய செய்தி