| ADDED : ஜூன் 27, 2024 07:00 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியலில் 29 பேர் இடம் பெற்றுள்ளனர்.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 24ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில், மனு தாக்கல் செய்த 64 பேரில், 35 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 29 மனுக்கள் ஏற்கப்பட்டன.வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளான நேற்று பிற்பகல் 3:00 மணி வரை யாரும் வாபஸ் பெறாத நிலையில், மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 29 பேருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது.அங்கீகரிக்கப்பட்ட பிரதான கட்சிகளான தி.மு.க., - பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு கடந்த லோக்சபா தேர்தலில் ஒதுக்கப்பட்ட சின்னங்களே ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள சுயேச்சைகள் 26 பேருக்கும் சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.தேர்தலில் 29 பேர் போட்டியிடுவதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.