உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அம்மா உணவகத்திற்கு அரசு நிதி கிடைக்குமா

அம்மா உணவகத்திற்கு அரசு நிதி கிடைக்குமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், தமிழகம் முழுதும் நகராட்சி, மாநகராட்சிகளில், 407 அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டன. ஒரு இட்லி ஒரு ரூபாய், தயிர்சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விற்பனை விலையை விட, உணவு பொருள் உற்பத்தி, பணியாளர் ஊதியம் உள்ளிட்டவற்றால், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பொது நிதியில் இருந்து வழங்க வேண்டிய நிலை உள்ளது.சேலம் மாநகராட்சியில் செயல்படும், 11 உணவகங்களுக்கு, 2022 - 23ம் ஆண்டு செலவு, 4.18 கோடி ரூபாய். விற்பனை வாயிலாக கிடைத்தது, 65.36 லட்சம் ரூபாய். பொது நிதியில் இருந்து செலவு செய்தது, 3.53 கோடி ரூபாய். இதேபோல் தமிழகம் முழுதும் நிதிச்சுமையால் அம்மா உணவக செலவினங்களை, அரசே ஏற்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் மண்டல மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்கு போதிய நிதி வசதி உள்ளதால், அம்மா உணவகங்களை சமாளிக்க முடிகிறது. ஆனால் மற்ற மாநகராட்சி, நகராட்சிகளில் திட்டத்தை செயல்படுத்துவதில், நிதிச்சுமை கடும் சவாலாக உள்ளது. பணியாளர், ஓய்வூதியர்களுக்கு சம்பளம் வழங்கவே தடுமாறும் மாநகராட்சிகளில், அம்மா உணவகம் பெரும் சுமையாக உள்ளது.சென்னையில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால், சத்துணவு திட்டத்தைப் போல், அம்மா உணவகங்களுக்கு நேரடியாக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை