உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  100 கிராவல் மண் லாரிகள் பறிமுதல்

 100 கிராவல் மண் லாரிகள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில், கடந்த 15 நாட்களில், போலி பர்மிட்களை பயன்படுத்தியதாக, 100 கிராவல் மண் லாரிகள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கனிம வளத்துறை, காவல் துறையினர் நடத்தி வரும் அதிரடி சோதனை யின்போது, 'போலி பர்மிட்' பயன்படுத்தியதாக, 100 லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக மணல், எம்.சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளனத்தின் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: இந்த விவகாரத்தில், போலி பர்மிட் இருந்ததாகக் கூறி, லாரி உரிமையாளர்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அந்த ஆவணங்களை தயாரித்தவர்கள், பயன்பாட்டுக்கு கொண்டு வந்த, குவாரி உரிமையாளர்கள் மீதும், கனிமவளத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி