உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழையிலும் 100% பால் விநியோகம்; சொல்கிறது ஆவின்!

கனமழையிலும் 100% பால் விநியோகம்; சொல்கிறது ஆவின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கனமழையிலும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை. இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 லட்சம் லிட்டர் பால் 25,000 பாக்கெட் UHT பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின் பால், பால் பவுடர் மற்றும் UHT பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S. Gopalakrishnan
டிச 01, 2024 13:36

நான் சென்னையைச் சேர்ந்த, அறுபத்து இரண்டு வயசான் நடுத்தர வர்க்கத்தவன். பால் பவுடர் வாங்கி பால் தயார் செய்து காஃபி, தயிர் தயார் செய்த யாரையும் நான் பார்த்தது இல்லை. ஆவின் யாருக்கு பால் பவுடர் விநியோகம் செய்தது ?


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 13:34

மக்கள் பாவம் தேடி வந்து வாங்கிட்டு போறாங்க , ஆனாலும் இவர்கள் ஆட்சியாளர்களை போல ஸ்டிக்கர் ஓட்டிட்டாங்களே


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 13:23

சிறப்பு. இந்த புயல் மழை நாட்களில் கூட தமிழ் நாடு அரசின் பால்வளத் துறையின் செயல்பாடுகள் சூப்பர். முதல்வருக்கு நன்றிகள்.


வாய்மையே வெல்லும்
டிச 01, 2024 13:02

கனமழையிலும் பால் விநியோகம் . இதெல்லாம் பெருமையா பாஸ். முடிந்தால் தேர்தலில் சொல்லி உளுத்துப்போன மாடல் அரசு வாக்கு கேளுங்களேன் .. ஹா ஹா ஹா


Ramesh Sargam
டிச 01, 2024 12:22

டாஸ்மாக் விநியோகம் எப்படி?


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 13:25

டாஸ்மாக் எங்க சார் விநியோகம் பண்றாங்க?? நாம தான் போய் வாங்க வேண்டியிருக்கு. நேற்று நிறைய கடைகள், காலையில் பூட்டி இருந்தன. மாலை 6 மணிக்கு திறந்து விட்டார்கள்.


முக்கிய வீடியோ