உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாட்ஸாப் குறுஞ்செய்தி அனுப்பி 1,000 போலீசிடம் மோசடிக்கு முயற்சி

வாட்ஸாப் குறுஞ்செய்தி அனுப்பி 1,000 போலீசிடம் மோசடிக்கு முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எஸ்.பி.ஐ., வங்கி பெயரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரை குறி வைத்து, 'சைபர்' குற்றவாளிகள் பண மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர்.தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான போலீசார், எஸ்.பி.ஐ., வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். இவர்களை குறி வைத்து, சைபர் குற்றவாளிகள் பண மோசடிக்கு முயற்சி செய்வது அதிகரித்து வருகிறது. 'உங்கள் வங்கி கணக்கிற்கு, 5,899 ரூபாய் ரிவார்டு பாயின்ட் வழங்கப்பட்டுள்ளது. அதை இன்றே ஆக்டிவேட் செய்ய வேண்டும்' என, ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாருக்கு, எஸ்.பி.ஐ., வங்கியின் பெயரில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு உள்ளன.இதுகுறித்து, அந்த போலீசார் கூறியதாவது: கமிஷனர் மற்றும் மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில், எஸ்.பி.ஐ., வங்கி நடத்திய முகாம் வாயிலாக கணக்குகள் துவக்கினோம். அப்போது, எங்கள் மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட விபரங்களையும் சமர்பித்தோம்.இந்த மொபைல் போன் எண்கள், சைபர் குற்றவாளிகளுக்கு எப்படி சென்றது என்று தெரியவில்லை. அவர்கள் எங்களின் வாட்ஸாப் குழுக்களை முடக்கி, எங்களின் தனிப்பட்ட 'வாட்ஸாப்' எண்ணுக்கு பண மோசடி செய்வதற்கான குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இதுபற்றி, போலீசார் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தி வரும், வாட்ஸாப் குழுக்கள் வாயிலாக எச்சரிக்கை செய்து வருகிறோம். சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளோம். அவர்கள் ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை வழங்கி உள்ளனர். அதன்படி செயல்பட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 20, 2024 10:23

வங்கியின் கிளார்க் நினைத்தால் தகவல்களை விற்க முடியும் ...... வருமானத்துக்கு ஆசைப்பட்டு செய்திருக்கலாம் ...... இன்னொரு விஷயம், ஈ காமர்ஸ் இணையதளங்களில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவை வங்கிக்கணக்கு விபரங்கள் கொடுக்கிறீர்களே ..... அது போதாதா ???? அதுவும் அமேசானில் நிரந்தரமாக கிரெடிட் / டெபிட் கார்டு தகவல்கனை பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது .....


veeramani
செப் 20, 2024 09:02

பாரத ஸ்டேட் வங்கியை குறை சொல்லவேண்டாம் இவர்கள் சேமிப்பு கணனிக்கு துவங்க மட்டும்தான் தகவல சேகரிப்பார்கள். அனைத்து காவலர்களிடமிருந்து தகவல்களை பெற்று அதை உதவி சேமித்துவைத்தது ....அங்கிருந்து மொபைல் நும்பர்கள் வெளியே சென்று இருக்கலாம்


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 20, 2024 08:59

அண்ணே, ரொம்பவும் தோண்டி துருவி ஆராய்ச்சி செஞ்சா , வாட்ஸ் அப் பில் குறுஞ்செய்தி அனுப்பினது போலீஸ்காரங்களாகத்தான் இருக்கும்.


VENKATASUBRAMANIAN
செப் 20, 2024 08:16

காவல்துறை யில் கறுப்பு ஆடுகள் நிறைய உள்ளன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை