உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.11.8 கோடி!

திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.11.8 கோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: பாங்காக்கில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 11.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 11.8 கிலோ உயர் ரக கஞ்சா, திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக, விமானத்தில் நேற்று திருச்சி விமான நிலையம் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற பயணியை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.அந்நபர், 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சாவை, சீல் செய்யப்பட்ட பைகளில் எடுத்து வந்தது தெரியவந்தது. கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்நபரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அண்மைக் காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வருவது அதிகரித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சாவின் மதிப்பு ரூ.11.8 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Saravanan G
ஜூலை 08, 2025 17:58

போலீஸ்கு அனைத்து விவரங்களும் தெரியும். எங்கிருந்து வந்தது எங்கு செல்கிறது யாருக்கு தொடர்பு இருக்கிறது என அனைத்தும் தெரியும். ஆனாலும் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறாள்கள்


Kumar Kumzi
ஜூலை 08, 2025 15:31

நம்பிள் ஓட்டு பிச்சைக்காரரின் பச்சை பிள்ளைகளின் குலத்தொழில் ஆச்சே


ஜூலை 08, 2025 15:28

கொடும்செயல் செய்த அந்த நபருக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் ..உடனே அந்த நபரை அவர் இப்போது வசிக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்கு மாற்றுங்கள் ..போலீசுக்கு பணியிட மாற்றம் செய்வதுபோல் அவர் புது ஊரில் திசை தெரியாமல் திண்டாடட்டும் ..


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 08, 2025 14:37

டிமாண்ட் எங்கே அதிகமாக இருக்கிறதோ அங்குதான் சப்ளையும் அதிகமாக இருக்கும்


samvijayv
ஜூலை 08, 2025 14:22

மிக அற்புதம்


sridhar
ஜூலை 08, 2025 14:17

அந்த நபருக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை தானே . ஆனால் எங்களுக்கு தெரியும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை