உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 75 நாட்களில் நாய் கடியால் 1.18 லட்சம் பேர் பாதிப்பு; ரேபிஸ் நோயால் 4 பேர் உயிரிழப்பு

75 நாட்களில் நாய் கடியால் 1.18 லட்சம் பேர் பாதிப்பு; ரேபிஸ் நோயால் 4 பேர் உயிரிழப்பு

சென்னை : தமிழகத்தில், கடந்த இரண்டரை மாதங்களில், 1.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர், 'ரேபிஸ்' நோயால் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில், தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், ஏற்படும் ரேபிஸ் தொற்றில் இருந்து, செல்ல பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு தடுப்பூசி தீர்வாக உள்ளது.நாய்க்குட்டி பிறந்த முதலாண்டில், இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இவ்வாறு தடுப்பூசி போடாத நாய்கள், மனிதர்களை கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவி, இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.கடந்த ஆண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக, அரியலுாரில், 37,023; கடலுாரில் 23,997; ஈரோட்டில் 21,507 பேர்; சென்னையில், 24,088 பேர் பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், 43 பேர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்தனர்.இந்த ஆண்டு, கடந்த இரண்டரை மாதங்களில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 764 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் இருவர், ராணிப்பேட்டை, நாமக்கல்லில் தலா ஒருவர் என, நான்கு பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க் கடியால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, குரங்கு, நரி, கீரி, ஓநாய், வவ்வால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடித்தவுடன், ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.நாய் போன்ற விலங்குகள் கடித்தால், அவர்களுக்கு, முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள் மற்றும், 28ம் நாள் என, நான்கு தவணை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆழமான காயமாக இருந்தால், 'இம்யூனோக்ளோபிலின்' தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், முறையாக சிகிச்சை பெறாமல், சிலர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழக்கின்றனர். எனவே, விலங்கினங்கள் கடித்தால், டாக்டரின் ஆலோசனைப்படி முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Barakat Ali
மார் 18, 2025 10:30

திராவிட மாடலை விட, அது வழங்கும் டாஸ்மாக் சரக்கை விட வெறிநாய்க்கடி ஆபத்தானதா?? விவாதம் தேவை...


Appa V
மார் 18, 2025 22:49

கடிச்சு பாத்துட்டு சொல்லுங்க


Yes your honor
மார் 18, 2025 10:24

அந்த நாயை நன்றாகப் பாருங்கள். கருப்பு வாய், சிகப்பு உடல். பிறகு, அது என்ன நல்ல நாயாகவா இருக்கப் போகிறது. சரக்கிலிருந்து சட்னி அரைக்கும் தேங்காய் வரை அனைத்து விலையையும் ஏற்றி நம்மைக் கொல்லத்தான் செய்யும். இந்த விலையேற்றம் என்பதே நம்மைப் போன்ற ஏழை பாழைகளின் வயிற்றில் அடித்து, இலட்சம் கோடி ஊழல் செய்து இவர்கள் வீட்டு உலையில் போடத்தான். திமுக தமிழகத்தின் சாபம்.


Mecca Shivan
மார் 18, 2025 09:50

அதான் முற்றம் கோணலாக இருப்பதாக அமைச்சர் சொல்லிவிட்டார் .. சாதாரண ஜனங்களை போல ரோட்டில் தனியாக நடந்து செல்வது இல்லை .அதனால் அவர்களுக்கு பிரச்சனை இல்லை .. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு நாய் பண்ணையே உள்ளது .. எப்போது அது வக்கீல்களை கடிக்கறதோ அப்போதுதான் கண் திறப்பார்கள் .. ஒரு வக்கீல் தனது சொந்த செலவில் அத்துணை நாய்களுக்கும் உணவு வழங்கி புண்ணியம் தேடிக்கொள்கிறார் .. அனால் பாதிக்கப்படுவது பொதுஜனங்களும் பிற வக்கீல்களும் வளாகத்தில் தங்கி வசிக்கும் பணிபுரியும் இதர பணியாளர்கள் மற்றும் அவர்கள் குழந்தைகள்தான் . PETA இன்னொரு சோரோஸ் குரூப் பணத்தை நடிகைகளுக்கு தண்ணியாக செலவழித்து நாய்கள் மூலமாக பண பரிமாற்றம் செய்துவருகிறது


dhamo tester
மார் 19, 2025 21:02

ஆம் தினம் தினம் கொலை,கொள்ளை பாலியல் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறோமோ.அதே போல் இதையும் கண்டு கொள்ள வேண்டாம்


dhamo tester
மார் 19, 2025 21:20

அப்படியா? அப்ப மனிதர்கள் எந்த தவறும் செய்வதில்லை. அப்படித்தானே?


karthik
மார் 18, 2025 09:38

லட்சக்கணக்கில் பாதிக்கப்படும் மனித உயிர்களைவிட.. அதில் எத்தனை பிஞ்சு குழந்தைகள் அவர்களை விட இந்த தெருநாய்கள் முக்கியமாக போய்விட்டதா? இந்திய நாட்டில் எதற்குமே ஒரு முறை மதிப்பு இல்லாமல் போய்விட்டது.தெரு நாய்கள் என்பது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம்.. அவைகள் நாட்டின் அத்தியாவிஷய தேவைகள் இல்லை.. உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றி எழுதவேண்டும் விரைவில்


Svs Yaadum oore
மார் 18, 2025 07:54

நாய்கள் கருத்தடை முறையாக செயல்படுவதில்லை.. இந்த பட்ஜெட்டில் விடியல் 20 கோடிகள் அதற்கு ஒதுக்கீடு.. அந்த பணம் எங்கே போகிறது? இந்த தடுப்பூசி மட்டும் வருஷம் 3000 கோடிகள் விற்பனை ...அதில் மருந்து கம்பெனி காரனிடம் கமிஷன்.. கமிஷன் வாங்க நாய்களை பெருக விட்டு பிறகு தடுப்பூசி போடவில்லை என்று அடுத்தவனை குறை சொல்வது ....எல்லாம் விடியல் லஞ்ச லாவண்யம் கொள்ளை ....ரேபிஸ் நோயால் இறப்பது மிக மிக கொடுமையான விஷயம் .....


saravan
மார் 18, 2025 07:50

விலங்கு வரலாறு பேசுறவனுங்க, ஆளுக்கு 10 தெருநாயை தத்தெடுத்து அவன் வீட்டில் வளர்க்கணும் ...அதைவிடுத்து சும்மா கருத்து போடக்கூடாது...


Svs Yaadum oore
மார் 18, 2025 07:47

கடந்த ஆண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். விழிப்புணர்வு இல்லாததால், முறையாக சிகிச்சை பெறாமல், சிலர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழக்கின்றனராம் ...இது என்னையா அரசாங்கம் ....ஊரெங்கும் நாய்கள் ...இவற்றை கார்பொரேஷன் முனிசிபாலிட்டி கட்டுப்படுத்துவது இல்லை....நாய் கடித்த பிறகு ஊசி போடவில்லை என்று அடுத்தவனை குறை சொல்றான் ....ஊசி விற்பதில் மருந்து கம்பெனி காரனிடம் கமிஷனா ??....


கடல் நண்டு
மார் 18, 2025 06:54

சுத்தம், சுகாதாரம் என்றால் என்ன என்பது பற்றி எள்ளவும் அறியாதவன் அந்த துறையில் இருக்கிறான்.. அரசாங்க ஓசி வண்டி வேறு… யாரை நாய் கடித்தாலும் , பாம்பு கடித்தாலும் அவனுக்கு ஒன்றும் இல்லை.. தடுப்பூசிய போடு.. இல்ல செத்துப்போ.. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..


sundarsvpr
மார் 18, 2025 05:40

காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. ஆண்டவன் படைப்பும் அப்படியே. பூவுலகில் மனிதர்கள் வாழ உரிமை உள்ளதுபோல் மிருகம் புழு பூச்சிகளுக்கு உரிமை உண்டு. அவைகளும் வாழ போராடுகின்றன. பாம்பின் நச்சு வைத்தியத்தில் பயன்படுகிறது. நமக்கு அரசு இருக்கிறது நம்மை காப்பாற்றுகிறது. ஆனால் நல்லது செய்கிற உயிரினங்கள் நாம் ஏன் அரசு காப்பாற்றுவதில்லை.? போராட்டம்தான் வாழ்க்கை. காரணம் நமக்கு ஆறாது அறிவு ஆண்டவன் கொடுத்துள்ளான்.


Appa V
மார் 18, 2025 06:37

தினம் ஒரு மிருக காட்சி சாலைக்கு விஜயம் பண்ணுங்க


karthik
மார் 18, 2025 09:40

ஏண் நாய்கள் எந்த உணவுச்சங்கலியிலும் இல்லை. நாய்கள் வளர்க்க விரும்புவார்கள் தனியாக வளத்துவிட்டு போகட்டும்.. தெருவில் குழந்தைகள் கூட பாதிக்கப்படுகிறார்கள்.. வேண்டும் என்றால் நீ அந்த ஹீரோ நாய்களை உன் வீட்டிற்கு உள்ளே கொண்டு சென்று வளர்த்துக்கொள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை