உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 வாரத்தில் 134 மின் திருட்டு கண்டுபிடிப்பு; ரூ.1.23 கோடி அபராதம் வசூல்

2 வாரத்தில் 134 மின் திருட்டு கண்டுபிடிப்பு; ரூ.1.23 கோடி அபராதம் வசூல்

சென்னை : தமிழகத்தில் கடந்த இரு வாரத்தில், 134 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஈடுபட்டவர்களிடம், 1.23 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மின் திருட்டை தடுக்கும் பணியில், மின் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம், 5ம் தேதி சென்னை மண்டல அதிகாரிகள், வட சென்னை பகுதிகளில் மின் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்ததில், 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, 15.68 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.இம்மாதம், 4, 5, 6, 7 ஆகிய நாட்களில், திருச்சி மண்டல அதிகாரிகள், கடலுார், விழுப்புரத்தில் ஆய்வு செய்து, 60 மின் திருட்டுகளை கண்டுபிடித்தனர். கோவை தெற்கு, பல்லடம், தர்மபுரி, உடுமலைப்பேட்டையில், 6ம் தேதி நடந்த ஆய்வில், 14 மின் திருட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு, 15.10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடியில், 6, 7ம் தேதிகளில் நடந்த ஆய்வுகளில், 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 9 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, விருது நகர், துாத்துக்குடியில், 14, 15 ஆகிய தேதிகளில் நடந்த ஆய்வில், 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 18.61 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
மார் 27, 2025 12:05

திருவிழா காலங்களில் நாள் கணக்கில் தெரு முழுக்க பல tube light கள் ஐயப்ப சீசனிலும் தனியார் மாரியம்மன், பிள்ளையார் கோவில்களிலும் திருட்டு மின்சாரத்தில் போடப்படுகிறது. மின்வாரியம் அவைகளை ஏன் கண்டு கொள்வதில்லை..?


Varadarajan Nagarajan
மார் 27, 2025 06:47

பல இடங்களில் மின்வாரிய ஊழியர்களின் துணையோடுதான் மின் திருட்டுகள் நடக்கின்றன. கைநிறைய சம்பளம் மற்றும் இதர சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு கொடுத்தாலும் அதற்க்கு குறைவில்லாமல் லஞ்சம் வாங்குகின்றனர். "தாயைப்போல் பிள்ளை" "அரசு எவ்வழியோ மக்கள் வழி" என்ற பழமொழிகள் ஞாபகம் வருகின்றது.


Anantharaman Srinivasan
மார் 27, 2025 11:51

மின் திருட்டுக்கும் இந்த தாயைப்போல் பிள்ளை" பழமொழிக்கும் என்ன சம்பந்தம்.?


G.Loganathan
மார் 27, 2025 06:36

மின்சார வாரிய அதிகாரிகள் தூங்குகிறார்கள். மின் கம்பங்களில் ஒவ்வொரு இயணைப்பிலும் CT பொருத்தி சர்வரில் இணைத்துவிட்டால் மென் பொருள் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது தெரியும் மேலும் அதே பக்கத்தை உபயோகிப்பாளர் அலைபேசிக்கு மின் அஞ்சலுக்கும் அனுப்பலாம். ஒவ்வொரு வீட்டிலும் மீட்டர் தேவையில்லை. AI தொழில் நுட்பம் எவ்வளவோ உயரத்திற்கு சென்று விட்டது. மின்சார வாரியம் ஊழலில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. தொழிலில் முன்னேறவில்லை.


புதிய வீடியோ