வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இத்தனை வருடங்கள்ஆண்ட திராவிட கட்சிகள் எந்த ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாமல் அரசில் மட்டுமே செய்து வந்துள்ளார்கள். இதுதான் திராவிட மாடல்
சென்னை : தமிழகத்தின் 90 அணைகளில், 141 டி.எம்.சி., நீர் மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில், அடுத்த மழையை எதிர்பார்த்து, நீர்வள துறையினர் காத்திருக்கின்றனர்.தமிழக நீர்வள துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும். இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவையை மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன. தற்போது, 90 அணைகளிலும் சேர்த்து, 141 டி.எம்.சி., நீர் மட்டுமே கையிருப்பு உள்ளது. அதிகபட்சமாக சேலம் மேட்டூர் அணையில், 60.8 டி.எம்.சி; ஈரோடு பவானிசாகரில் 21; கோவை பரம்பிக்குளத்தில் 13.1; சோலையாறு அணையில் 5.03 டி.எம்.சி., நீர் உள்ளது. பல அணைகளில் இருந்து, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த மழையால், பல அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்தது. அடுத்த சுற்று மழை கொட்டினால், அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. அதை எதிர்பார்த்து நீர்வள துறையினர் காத்திருக்கின்றனர்.
இத்தனை வருடங்கள்ஆண்ட திராவிட கட்சிகள் எந்த ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாமல் அரசில் மட்டுமே செய்து வந்துள்ளார்கள். இதுதான் திராவிட மாடல்