உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ம.தி.மு.க.,வினர் 150 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

 ம.தி.மு.க.,வினர் 150 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ம.தி.மு.க., முன்னாள் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உட்பட 150க்கும் அதிகமானோர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தனர். தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. ம.தி.மு.க.,வின் முன்னாள் சிவகங்கை மாவட்ட செயலர் 'பொடா' செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலர் செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலர் பொடா அழகுசுந்தரம், விருதுநகர் மாவட்ட செயலர் சேகர், மாநில தேர்தல் பணி துணை செயலர் விடுதலை வேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட, அக்கட்சி தலைமையால் நீக்கப்பட்டவர்கள், அதிருப்தியில் வெளியேறியவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 29, 2026 16:08

தவறான செய்தியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கட்சியில் மொத்தமா உறுப்பினர்களின் எண்ணிக்கையே ஐம்பதை தாண்டாது.


Govi
ஜூன் 29, 2026 11:43

தமிழகம் முழுவதுமே 150 பேர் தான் இருப்பாங்க....


சமீபத்திய செய்தி