உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது

குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கூலி தொழிலாளியின் மகளான மூன்றரை வயது சிறுமி நேற்று அருகில் உள்ள அங்கன் வாடிக்கு சென்றுள்ளார். பின்னர் மதிய உணவு இடைவேளையில் கை கழுவ சென்ற சிறுமியை காணவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p8pqttbs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆசிரியை மற்றும் உதவியாளர் தேடிய நிலையில் அங்கன்வாடிக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குழந்தையின் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள், அங்கு சென்று பார்த்த போது சிறுமி தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு தங்களது சொந்த செலவில் தனியார் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சந்தேகத்தின் பேரில் போலீசார் சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுவன் கை கழுவ வந்த சிறுமியை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சத்தம் போட்டதால் ஆத்திரத்தில் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது. அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kanns
பிப் 25, 2025 11:45

People Dont Believe Cookedup Stories of Case-News-Vote-Power Hungry Criminals& Vested FalseComplaint Gangs UNLESS THEY PUNISH All PowerMisusing Investigator-Police, Biased Media, PartyPoliticians, Officials& FALSE COMPLAINT GANGS incl Advocates. However, If True Must be Punished by FastTrack Trial.


sridhar
பிப் 25, 2025 10:44

யாருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை , 16 வயது சிறுவனுக்கு பாராட்டு என்று செய்தி போடும் விரைவில் வரும் தமிழகத்தில்.


vijai hindu
பிப் 25, 2025 10:43

இவன் சிறுவன் அல்ல விஷப்பாம்பு இந்தப் பாம்பை அடித்து சாவடிக்க வேண்டும் சீர்திருத்த பள்ளியில் அனுப்பக்கூடாது மீண்டும் வெளியில் வந்து இதே வேலை தான் செய்வான் இவனை சாவடிப்பதே மேல் .


Venkatesan Ramasamay
பிப் 25, 2025 11:06

சரியாய் சொன்னீர்கள்....எல்லா பசங்களும் இந்த பாழாய்ப்போன செல் ..வந்ததாலேயே சீர்கெட்டு போகிறானுங்க ...இது உண்மைலேயே விஷப்பாம்புதான்


Karthik
பிப் 25, 2025 19:39

சரியாக சொன்னீர்கள்.. இவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தாலும் இவன் படிக்கவோ/ திருந்தவோ வாய்ப்பில்லை. சிறையில் மாஸ்டர் பட்டம் பெற்று விடுதலையாவான். பின்னர் இந்த சமூகத்தில் அதீத வன்மத்தை செயல்படுத்துவான். அது தேவையா??


Nallavan
பிப் 25, 2025 10:42

பெற்றோர் , ஆசிரியர், சமுகத்தின் நல் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுப்பதின் வாயிலாகவே இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடவ வண்ணம் இருக்கும், பெற்றோர்கள் பாலின கல்வியை சிறுவயதிலேயே மாணவர்களுக்கு புரியும் படி கற்றுக்கொடுக்கவேண்டும்


Kasimani Baskaran
பிப் 25, 2025 15:22

படிக்கவே போக முடியவில்லை... எப்படி நன்னெறி கற்பது? அப்படியே போனாலும் பெரியார் ஜாதியை ஒழித்தார் என்று எப்படி என்று விளக்க முடியாத கோட்பாடுதான் சொல்லிக்கொடுப்பார்கள்.


Kasimani Baskaran
பிப் 25, 2025 10:22

ஒரு பக்கம் படமெடுத்து கருப்பை வெள்ளையாக்குவது. அடுத்த பக்கம் தான் மட்டுமே லாபம் பார்க்குமளவுக்கு படங்களை பிடுங்குவது... கொள்ளைக்காரர்களை வைத்து கல்லூரிப்பெண்களை மிரட்டி பணிய வைப்பது... அயலக அணியை வைத்து போதை வஸ்துக்கள் கடத்துவது, இதெல்லாம் மேலடுக்கு என்றால் குப்பை பொறுக்கும் சிறுவன் கூட அவனது தகுதிக்கு குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறான். படிக்க வேண்டிய வயதில் குப்பை பொறுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தெரியவில்லை. லண்டனில் பிள்ளைகளை படிக்க வைப்போருக்கு சமூக நீதி பேசத்தெரியுமே தவிர வாழ வழியில்லாமல் 16 வயதில் குப்பை பொறுக்கும் அளவில் இருப்பவனின் வலியை புரிந்து கொள்ள முடியாது. சமூகநீதி, சமத்துவம் எல்லாம் முழு அளவிலான கேடித்தனம். இவர்களுக்கு பின்னல் போவோர் கொலைக்குற்றவாளிகளை விட கேவலமானவர்கள், கொரூரமானவர்கள்.


rasaa
பிப் 25, 2025 10:14

ஒரு ஆண்டு சிறையில் மாஸ்டர் பட்டம் பெற்று, வெளியில் வந்து இன்னும் கொடூரமாக செயல்படுவான்.


rasaa
பிப் 25, 2025 10:12

சிறுவர்கள் என்ற வயதை 17ல் இருந்து 14ஆக குறைக்கவேண்டும்.


Apposthalan samlin
பிப் 25, 2025 10:07

அந்த காலத்தில் கூட்டு குடும்பம் இருந்தது தாத்தா பற்றி நற்போதனைகள் சொல்லி கொடுப்பார் அடுத்து பெற்றோர்கள் போதனைகள் சொல்லி கொடுப்பர் .


Svs Yaadum oore
பிப் 25, 2025 09:40

இந்த ஆட்சியில் இந்த மூன்றரை வயது குழந்தை கொடுமைக்கு என்ன பதில் ??.....இவனுங்க ஆட்சியில் போலீசை கண்டு யாருக்கும் எந்த பயமும் இல்லை ...சிறுமி தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் .....மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கூலி தொழிலாளியின் மகளான மூன்றரை வயது சிறுமி....மிக பரிதாபம் ..... காசு வாங்கி வோட்டு போடும் மூடர் கூட்டம் .....


Oru Indiyan
பிப் 25, 2025 09:33

ஆண் வர்க்கத்தின் பாலியியல் வெளிப்பாடு. இதற்கு சரியான தண்டனை வழங்கணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை