மதுரை போலீசாரின் 160 கேள்விகளுக்கு ஐந்தரை மணி நேரம் சசிகலா புஷ்பா பதில்:கையெழுத்திட மறுப்பு
மதுரை:முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், போலி கையெழுத்திட்டதாக சசிகலா புஷ்பா எம்.பி., மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேற்று, அவர் மதுரை புதுார் போலீசார் முன் ஆஜராகி, ஐந்தரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.அ.தி.மு.க.,வில் இருந்த ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா உள்ளிட்டோர் மீது அவரது வீட்டில் பணிபுரிந்த பானுமதி, சகோதரி ஜான்சிராணி புகாரில் துாத்துக்குடி போலீசார், பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில், முன்ஜாமின் கேட்டு சசிகலா புஷ்பா தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனுதாக்கல் செய்யப்பட்டது. சிங்கப் பூரில் இருந்த சசிகலா புஷ்பா, 'மதுரை வந்து வழக்கறிஞர் முன், முன்ஜாமின் வக்காலத்து மனுவில் கையெழுத்திட்டதாக' தெரிவித்தார். இதில் சந்தேகம் இருப்பதாக அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, தொடர் நீதிமன்ற விசாரணைக்கு பின், செப்.,13ல் 'வழக்கறிஞர் முன்னிலையில் கையெழுத்திட்டதாக, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் போலி மனுதாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது. மோசடி, ஏமாற்று தல் உள்ளிட்ட சில பிரிவுகளில் புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இவ்வழக்கில், நேற்று காலை 11:45
மணிக்கு கணவர், மகனுடன் சசிகலா புஷ்பா, புதுார் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர்
பாலசுந்தரம் முன் ஆஜரானார். கணவன், மகனிடம் தலா 80 கேள்விகளும், சசிகலா
புஷ்பாவிடம் 160 கேள்விகளும் கேட்கப்பட்டன.அவர்கள் அளித்த பதில்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் டைப் செய்து 'பிரின்ட் அவுட்' எடுத்து சசிகலா புஷ்பா உட் பட மூவரிடம் கையெழுத்து பெறப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. பின்னர், விசாரணை முடிந்து மாலை 5:15 மணிக்கு வெளியே வந்தனர்.இதற்கிடையே, முன்ஜாமின் மனுவில் இடம்பெற்றது, சசிகலா புஷ்பாவின் கையெழுத்து தானா என உறுதிசெய்வதற்காக, அவரிடம் கையெழுத்திடுமாறு போலீசார் கூறினர். சசிகலாபுஷ்பா, 'கோர்ட் உத்தரவிட்டால் கையெழுத்திட தயார்' எனக்கூறி மறுத்துவிட்டார்.காரில் சாப்பாடு
சசிகலா புஷ்பா உட்பட மூவருக்கு மதிய உணவு சாப்பிட, 15 நிமிடங்கள் போலீசார் அனுமதி அளித் தனர். இதைத்தொடர்ந்து வெளியே வந்த மூவரும், ஓட்டல் ஒன்றில் இருந்து வாங்கி வரப்பட்ட சாப்பாட்டை, காரில் இருந்தவாறே சாப்பிட்டனர். நிருபர்களிடம் சசிகலா புஷ்பா கூறுகையில், ''மேலிடத்தின் அழுத்தம் காரணமாக, என் மீது தேவை இல்லாத வழக்குபதிவு செய்ய போலீசார் நிர்பந்திக்கப்பட்டிருக் கிறார்கள்,'' என்றார்.'எம்.பி., பதவி கொடுத்தது இறைவன்!'
''இறைவன் எனக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை கொடுத்ததற்கும், அதை நான் தக்க வைத்துக் கொண்டதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதா குறித்து 'கேபியஸ் கார்பஸ்' மனு போடுவேன் என்று நான் சொன்னது முதல், அவரது உடல்நலம் குறித்தத கவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் குறித்த சிறுதகவல்கூட வெளியே வர வழைக் கும் அளவிற்கு, இறைவன் எனக்கு இந்த பதவியை கொடுத்ததற்கும், அதை நான் தக்க வைத்துக்கொண்டதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.ராஜ்யசபா எம்.பி., என்ற முறையில் முதல் வரை சந்திக்கும் ஆர்வம் உள்ளது. அது கடமை யும்கூட. முதல்வர் மிக விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும். நான் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் சிலர்தான். பின்னால் இருந்து அவர்கள்தான் யாரையும் பார்க்கவிடாமல், கடிதங்களை கொடுக்க முடியா மல் செய்கிறார்கள் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். முதல்வர் குண மடை ந்து வந்த பிறகு, எல்லோர் பற்றியும் தெரிந்துக் கொண்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க வில்லை என்றாலும்கூட, தொண்டர்களுக்கா வது நல்லது நடக்கட்டும். இவ்வாறு கூறினார்.