உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.8 லட்சம் பேர் விண்ணப்பம்; தேர்தல் கமிஷன் தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.8 லட்சம் பேர் விண்ணப்பம்; தேர்தல் கமிஷன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் வழங்கலாம் எனவும் தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இதுவரை 6 மற்றும 6 ஏ படிவங்களை நிரப்பி ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 111 பேர் மனு கொடுத்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அதேபோல், 'பெயரை நீக்கக் கோரி 1,708 பேர் மனு கொடுத்துள்ளனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பெயரை சேர்க்க கோரி விண்ணப்பம் கொடுத்தவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்', என தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சண்முகசுந்தரம்
டிச 26, 2025 19:39

நேரடியாக சென்று பெயர் சேர்க்க முடியாதவன் நான் எனவே வோட்டர் ஹெல்ப் லைனில் சேர்க்க முயற்சி செய்தேன் ஆனால் முடியல இது வெறும் கண் துடைப்பு நாடகம்


abhinaya
டிச 26, 2025 19:20

எஸ் ஐ ஆர் பணியால் கைக்கு மேல் கிடைத்த பலன் இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதுதான்


தத்வமசி
டிச 26, 2025 19:06

வேண்டுமென்றே பலரது பெயரும் தெரிந்தே விடப்பட்டது. எனது நண்பர் ஒருவருடைய பெயர் விடுபட்டது. எனக்கு போன் செய்து என்ன செய்வது என்று கேட்டார். எனது உறவினர் பெயர் விடுபட்டது. அவரும் என்ன செய்வது என்று கேட்டார். அலுவலகம் சென்று கேட்கவும் என்று கூறினேன். அவர் அலுவலகம் சென்று கேட்ட போது, இங்கே அங்கே என்று இழுத்தடித்தனர். பிறகு அவர்களே கூறியது " இப்போது கொடுக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்து நடக்கும் முகாமில் நீங்கள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்து விடுங்கள்" அதற்கான சேர்க்கை உடனே தொடங்கும் என்று கூறினார்கள். வேலையை ஒழுங்காகச் செய்யாமல் பெயரை நீக்கிவிட்டு, மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ? நானும் எனது பிஎல்ஓவை மீண்டும் மீண்டும் போனில் தொடர்பு கொண்டு வரவழைத்து விண்ணப்பத்தை கொடுத்தேன். முகாம் நடப்பதை விளம்பரப்படுத்தவில்லை. இப்போது கூட நாளையும் மறுநாளும் முகாம் நடக்கப் போகிறது. எந்த விளம்பரமும் இல்லை. கட்சிக்காரர்கள் மூலம் விவரம் சொல்லப்பட்டு கட்சிக்காரர்கள் அறிந்துள்ளனர். பொது மக்களுக்குத் தெரியாது. விடுபட்டவர்கள் பேசட்டும் என்று அதிகாரிகள் அலட்சியமாக வேலை செய்கிறார்கள். அதனால் வந்தது இப்போது மீண்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் கேட்டுள்ளனர். இதில் தேர்தல் துறையை குறை கூறுவார்கள் பாருங்கள்.


முக்கிய வீடியோ