உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழிக்கு ஆதரவாக 20 லட்சம் பேர் கையெழுத்து!

மும்மொழிக்கு ஆதரவாக 20 லட்சம் பேர் கையெழுத்து!

சென்னை : தமிழக பா.ஜ., சார்பில், தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, சென்னையில் நடந்து வருகிறது. இதற்காக, பா.ஜ., நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, மக்களிடம் நேரடியாக கையெழுத்து பெறுகின்றனர். மேலும், 'புதிய கல்வி' எனும் இணையதளம் வாயிலாக, டிஜிட்டல் முறையிலும் கையெழுத்து பெறப்படுகிறது. வரும் மே மாதத்திற்குள், ஒரு கோடி கையெழுத்து பெற்று, அதை ஜனாதிபதியிடம் வழங்க பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். நேற்று வரை, 20.33 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன; 7.12 லட்சம் பேர் இணையதளம் வாயிலாகவும்; 13.21 லட்சம் பேர் நேரடியாகவும் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'நம் வருங்கால தலைமுறையினருக்கு, தரமான, சமமான மும்மொழிக் கல்வி வேண்டும் என, ஆர்வத்துடன் சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றுள்ள, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ப.சாமி
மார் 20, 2025 18:36

நம் அறிவை வளர்த்துக் கொள்ள எந்த மொழி என்று பாராமல் கல்வி கற்க வேண்டும்.வங்கியில் பணம் செலுத்த பணம் எடுக்க பாரம்கூட எழுத தெரியாமல் பலர் உள்ளனர்.இப்படி பல உதாரணங்கள் உள்ளன.


Rajathi Rajan
மார் 20, 2025 11:40

இங்க இருப்பது இருபது பேர் கூட கிடையாது


अप्पावी
மார் 20, 2025 10:53

அண்ணாச்சியும், இசைத்தமிழும் இந்தில கையெழுத்து போட்டாங்களா?


TRE
மார் 20, 2025 10:36

மத வாத அரசியலுக்கு எதிராக அண்ணாமலை கையெழுத்து இயக்கம் துவங்க வேண்டும்


Arvind Bharadwaj
மார் 20, 2025 09:21

போன வருஷம் தமிழ்நாட்டுல தமிழ்ல பெயில் ஆனவங்களோட எண்ணிக்கை மட்டும் 48000. அதேமாதிரி உபியில ஹிந்தில பெயில் ஆனவங்க 2.4 லட்சம் பேர். இந்த பயல்களுக்கு அவங்களோட தாய்மொழியை கத்துக்குடுக்கறதா இல்ல மூணாவது மொழியை சொல்லித் தர்றதா? ஒரே குழப்பமா இருக்குதே.


Gopalakrishnan Balasubramanian
மார் 20, 2025 11:59

செம்ம troll


Velan Iyengaar
மார் 20, 2025 08:57

இவனுங்க மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினர் சேர்க்கை செய்தவிதம் பார்த்து நாடே சிரிப்பாய் சிரித்தது.. இப்போ இந்த காமெடி ..... எதையுமே ஒழுங்கா நேர்மையா செய்யத்தெரியாத கும்பலிடம் இந்த எண்ணிக்கை தெளிவு மற்றும் உண்மை தன்மை குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள் ????


மூர்க்கன்
மார் 20, 2025 10:51

இப்படி கேள்வி கேட்டா? எப்படித்தான் புழுகுறது??


Sampath Kumar
மார் 20, 2025 08:54

பூ இம்புட்டு தானா? 8 கோடியில் வெறும் 20 லச்சம் பத்தாது அதுவும் அக்கா கூட இருந்தும் தேறாது உனக்கே உண்மை புரியும் மரியாதையாக ஓடிப்போய் விடு


Oviya Vijay
மார் 20, 2025 07:17

டோட்டல் தமிழ்நாடு எடுத்தாலே சங்கிகள் மொத்தம் 1 லட்சம் கூட தேறாதே பா... அது சரி... ஒரு ஆளு 100 கையெழுத்து போடணும்னு சொல்லி இருப்பாங்களோ... யார் வந்து கணக்கெடுக்கப் போறா... நடக்கட்டும்... நடக்கட்டும்...


vivek
மார் 20, 2025 08:00

என்னய்யா கருத்து போடுறீர்


vivek
மார் 20, 2025 08:04

பாவம் ஒரே ...ஒரு ஓசி கொத்தடிமை கதறி கருத்து போடுது


pmsamy
மார் 20, 2025 06:37

மும்மொழி ஆதரவாளர்கள் தமிழினத்தின் துரோகிகள்


Venkatesan Srinivasan
மார் 20, 2025 08:59

திராவிஷர்கள், தமிழின விரோதிகள்.


D.Ambujavalli
மார் 20, 2025 05:59

இதேபோல் Tasmac ஐ மூடி , கனிமொழி கூறியதுபோ, இளம் விதவைகள் மாநிலமாக உள்ள பெயரை அழிக்கவும் கையெழுத்து வேட்டை நடத்தினால் nallathu.


புதிய வீடியோ