உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

-நமது நிருபர்-ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 833 துவக்கப்பள்ளிகள்; 99 நடுநிலைப்பள்ளி கள்; 108 உயர்நிலை; 98 மேல்நிலைப்பள்ளிகள் என, 1,138 பள்ளிகள் செயல்படுகின்றன.

செயல்பாடு

இப்பிரிவு மாணவர்களுக்காக, 1,143 விடுதிகளும் நடத்தப்படுகின்றன. ஆனாலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், இங்கு மாணவர்கள் சேர ஆர்வம் காட்டுவது இல்லை. எனவே, இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, அரசும் அதை ஏற்றது. ஆனாலும், இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது. 2021 - 22ம் கல்வியாண்டில், 95,013 மாணவர்கள் படித்தனர். தற்போது, 76,300 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

ஆசிரியர்கள் இல்லை!

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்றபின் கடந்த நான்காண்டில் மட்டும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2021 முதல் தற்போது வரை, 18,700 மாணவர்கள், இப்பள்ளிகளில் இருந்து வேறு பள்ளிகளுக்கு மாறியுள்ளனர். அரசின் அலட்சியம் ஒருபுறம் இருந்தாலும், இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததும், மாணவர்களின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாகும்.

அவசியம்

தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், கணினி ஆப்பரேட்டர் என, இப்பள்ளிகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட 6,240 ஆசிரியர் பணியிடங்களில், 1,177 இடங்கள் காலியாக உள்ளன. பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், பல இடங்களில் ஒரே ஆசிரியர் அனைத்து வகுப்புகளையும் கவனிக்கும் நிலை உள்ளது.இதனால், பெற்றோர், தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அனைத்து வசதிகளும் கிடைக்க, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் விரைவில் இணைப்பது அவசியமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ளதை போல, பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளிலும், 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 'இவற்றை நிரப்ப அரசு முன்வராதது, வேதனையாக உள்ளது. வேலுார் மாவட்டம் கீழ்வெள்ளம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் இல்லாததால், கீழ்மூணுார் பள்ளி ஆசிரியர்கள், சுழற்சி முறையில் கீழ்வெள்ளம் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். 'இதே நிலை தான் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது. ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலும் குறைந்துவிடும்' என்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கை

கல்வியாண்டு- மாணவர்கள் எண்ணிக்கை* 2021-22 - 95,013,* 2022-23- 87,700,* 2023-24- 81,100,* 2024-25- 76,300

ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை

மாவட்டம்- பள்ளியின் எண்ணிக்கை * விழுப்புரம்- 5* கடலுார்- 6* சிவகங்கை - 4* திருநெல்வேலி - 6* வேலுார்- 3* தர்மபுரி- 2* தஞ்சை - 7நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

vivek
ஜூன் 24, 2025 16:40

அந்த வீணா போன வேணுகோபால் எங்கப்பா


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 24, 2025 16:37

திராவிட விடியல் கும்பல்களுக்கு ஆதிதிராவிடர் ஓட்டு தான் தேவை, இவர்கள் வளர்ச்சி பற்றி என்ன கவலை, இவர்கள் போஸ்டர் ஒட்ட மட்டும் தேவை.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 15:45

திராவிட மாடல் சமூக நீதி இதுதான் .. இதைபற்றி பேசாதீர் பாஜக உள்ளே வந்துவிடும் ..சனாதனம் நுழைந்து விடும் ..இதுபெரியார் மண் ..அதனால் தான 20% சரிவு ...


Tiruchanur
ஜூன் 24, 2025 14:12

ஆடி திராவிட பள்ளிக்கூடங்களுக்கு ஆதி திராவிட ஆசிரியர்களையே நியமிக்கட்டும். ஒருத்தன் கூட பாஸ் ஆக மாட்டான். அப்போ எல்லாரும் ஒரே கிளாஸ்ல நிறைய வர்ஷம் இருப்பாங்க. இப்படியாக மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்கலாம். எப்படி ஐடியா?


sundarsvpr
ஜூன் 24, 2025 13:32

இட நபர் ஒதிக்கீடு பள்ளிகளில் மட்டும் கடைபிடித்தல் போதாது. அரசியல் கட்சிகளில் ஏன் இல்லை ? தாழ்த்தப்பட்டவர்கள் 18% இருக்கவேண்டும் என்பது சட்டம். சட்டம் இயற்றியவர்கள் ஏன் தங்கள் கட்சிகளில் செயல்படுத்தவில்லை? அமைச்சர்கள் நியமனத்தில் ஏன் பார்ப்பதில்லை.?


Svs Yaadum oore
ஜூன் 24, 2025 14:19

இந்த சமூக நீதி இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் ஏன் இல்லை?? இவனுங்க பள்ளி நடத்துவது அரசு பணத்தில் ...ஆனால் சமூக நீதி இட ஒதுக்கீடு அங்கு கிடையாது ..மக்கள் பணத்தில் இவனுங்க செய்வது வெறும் மத பிரச்சாரம் ......இதை மட்டும் விடியல் மத சார்பின்மையாக கேள்வி கேக்காது ...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 15:49

முதலில் திமுக ..திக விற்கு ஒரு ஆதி திராவிடர் தலைவராக முடியுமா ?


V Venkatachalam
ஜூன் 24, 2025 13:24

ஸன் ஷைன் பள்ளியில் கல்லா கட்றது குறையுதா? இல்லையே.. அப்பறம் என்ன? எல்லாம் சரியாகத்தான் இருக்கு. ஒன்றிய அரசு பணம் கொடுக்காமல் தமிழக அரசை நெஞ்சில் கொஞ்சமும் ஈரமில்லாமல் வஞ்சிக்கிறது. தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக வெற்றி நடை போடுவது ஒன்றிய அரசுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது.


நாஞ்சில் நாடோடி
ஜூன் 24, 2025 13:23

திராவிட கட்சிகளுக்கு இவர்களின் ஓட்டுதான் தேவையே தவிர இவர்களின் முன்னேற்றம் அல்ல ...


lana
ஜூன் 24, 2025 13:22

இதுக்கு குருமா என்ன போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்.


Svs Yaadum oore
ஜூன் 24, 2025 13:14

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிவு... 2021 - 22ம் கல்வியாண்டில், 95,013 மாணவர்கள்... தற்போது, 76,300 மாணவர்கள் மட்டுமே ....20000 மாணவர்கள் காணோம் ...காரணம் தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், கணினி ஆப்பரேட்டர் என்று யாருமே பள்ளியில் இல்லையாம். விடியல் சமூக நீதி மத சார்பின்மையை எப்போதும் கை விடாது ....இதெல்லாம் உத்தர பிரதேசம் பீகார் போன்ற படிக்காத ஹிந்திக்காரன் மாநிலத்தில் நடக்கும்.. தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ...இங்கே இது போல எதுவும் நடக்காது ..


Amar Akbar Antony
ஜூன் 24, 2025 12:46

ஏன் இன்னும் இட ஒதுக்கீடு? அப்படி வேண்டுமென்றால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகாவது கல்வியில் தேர்வில் எல்லோருக்கும் உள்ளதுபோல் மதிப்பெண்கள் பெறட்டும். பின்னர் என்பது விழுக்காடு வாங்கியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.


நாஞ்சில் நாடோடி
ஜூன் 24, 2025 13:21

CORRECT ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை