உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் குற்றம் புரிந்த 23 பள்ளி ஆசிரியர்கள்...டிஸ்மிஸ்: சான்றிதழையும் ரத்து செய்கிறது தமிழக அரசு

பாலியல் குற்றம் புரிந்த 23 பள்ளி ஆசிரியர்கள்...டிஸ்மிஸ்: சான்றிதழையும் ரத்து செய்கிறது தமிழக அரசு

சென்னை:பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 23 பேர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். அவர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திருச்சி, ஈரோடு, ஓசூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில், பள்ளி மாணவியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பூதாகரமாகின. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், 238 பள்ளி மாணவியர் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=61wke3w0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவற்றில், 26 சம்பவங்கள், பள்ளிகளுக்கு வெளியில் நடந்தவை என கண்டறியப்பட்டுள்ளன.

விசாரணை

பள்ளிகளில் நடந்த சம்பவங்களில், ஏற்கனவே 11 ஆசிரியர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். விசாரணை முடிந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களில், நான்கு பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். மேலும், 46 பேர் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடந்து வந்தது. இதில், திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தர்மபுரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஒருவர் என, ஏழு பேர் மீதான பாலியல் குற்றம் சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. தற்போது, மேலும் 15 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

உத்தரவு

இதையடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 பேரையும் பணியிலிருந்து நீக்கவும், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்யும்படியும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, இத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளி மாணவியருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண், 121ல் தெளிவாக கூறப்பட்டுள்ளன. அதன்படியே தற்போது பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்கள், கட்டாய பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்; அவர்களின் கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், அரசு பணியாளர் நடத்தை விதிப்படியான தண்டனைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கான நீதிமன்ற தண்டனையும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளி பாதுகாப்பு குழு மாற்றம் அவசியம்

பெற்றோர் கூறியதாவது:தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற எண்ணம் சமீப காலமாக மாறி வருகிறது. காரணம், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதால், பெரும்பாலான குழந்தைகள் வெளியில் சொல்ல தயங்குகின்றனர். அதையும் மீறி, அவர்கள் புகார் அளித்து, அதன் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை பாராட்ட வேண்டும். இந்த நடவடிக்கையால், குற்றமிழைத்த ஆசிரியர்களின் பணப்பலன்கள் ரத்தாக வாய்ப்புள்ளது. அதனால், குடும்பத்தில் செல்வாக்கை இழப்பர். அத்துடன், சமூகத்திலும் ஆசிரியர் என்ற மரியாதையை இழந்து விடுவர். அதிகாரத்தில் உள்ள சிலருடன் தொடர்பில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஆசிரியர்கள், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும்போது, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க அச்சப்படுகின்றனர். அதனால், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவையும் மறுபரிசீலனை செய்து, மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகார் அளிப்பது எப்படி?

மாணவியருக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து, பள்ளிகளில் உள்ள 'மாணவர் மனசு' பெட்டியில் எழுத்துப்பூர்வமான புகாராக அளிக்கலாம். மேலும், '14417' என்ற பள்ளிக்கல்வி துறையின் தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம்.குழந்தைகள் பாதுகாப்புக்கான '1098' மற்றும் மகளிர் பாதுகாப்புக்கான '181' என்ற தொலைபேசி எண்ணிலும், போலீசின் அவசர உதவி எண்ணான 100லும் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பாரதி
மார் 12, 2025 19:07

அப்படியே எல்லா அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கும் டிஎன்ஏ சோதனை செய்து அவர்கள் உத்தமபுத்திரர்கள் என்று சான்றிதழ் வாங்க உத்தரவிட்டால் நல்லது அது நேர்மையான அரசாக சட்டமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது


SUBRAMANIAN P
மார் 12, 2025 13:53

அதேபோல சரியா ஆட்சி செய்யாத, செய்யத்தெரியாத இந்த திமுக அரசையும் டிஸ்மிஸ் செய்யலாமே... ,


Nellai tamilan
மார் 12, 2025 13:22

உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதை முன்மாதிரியாக கொண்டு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.


Ram
மார் 12, 2025 13:10

பாலியல் குற்றவாளி ஆசிரியருக்கு தண்டனை கொடுப்பது வேலையிலிருந்து நீக்குவது சரி, அனால் அவரது சான்றிதழ்களை ரத்து செய்தால் அவருக்கு தண்டனை முடிந்தபிறகு வேறெங்கும் வேலை கிடைக்காது, அப்படியெனில் வெளியில் வந்தவுடன் வாழ்வதற்கு அவர் திருட்டு தொழில்தான் ஈடுபடமுடியும்.. ஒரு குற்றத்துத்து இதனை தண்டனை எதற்கு .... ஜெயிலில் போடுவதும் மட்டும் போதுமே


M S RAGHUNATHAN
மார் 12, 2025 12:53

இந்த உத்தரவு நீதி மன்றத்தில் செல்லாது. வேலை நீக்கம் சரி. ஆனால் கல்வி தகுதியை ரத்து செய்ய முடியாது. அந்த கல்வி தகுதியை பெற தவறான வழியில் சென்று இருந்தால் உதாரணமாக ஆள் மாறாட்டம், போலி சான்றிதழ் என்று இருந்தால் தான் சான்றிதழை ரத்து செய்ய முடியும்.


Mahesh Mu
மார் 12, 2025 11:22

சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா? நீங்களே முடிவு செய்யுங்கள்: 1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம். 2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது. ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம். 3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்குச் சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும், ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாகப் போட்டியிடலாம். 4. ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம். 5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும். ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், ஊனமுற்றவராகவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்கு கட்டளையிடலாம். அவருக்கே எதிராக எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம். 6. ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையறையும் உண்டு. ஆனால் ஒரு எம். எல். ஏ, எம்.பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து, 5 வருடம் லஞ்சம், ஊழல் மற்றும் எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும், இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?


பாரதி
மார் 12, 2025 19:09

உண்மை வெள்ளையன் எழுதிய சட்டத்தின் லக்னத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் நன்றி


aaruthirumalai
மார் 12, 2025 10:20

எதிர்கால தேர்தல் பட்டாசு


நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 07:17

அப்போ அந்த சாரு மீது என்ன நடவடிக்கை, கட்சி கொடி கட்டி பெண்களை விரட்டிய காமுகர்களுக்கு என்ன தண்டனை என்றும் சொல்லிடுங்க தமிழக அரசே, இல்லை என்றால் நீங்க அவர்களை பாதுகாப்பது தெள்ள தெளிவாக ஆசிரியர்களுக்கு புரிந்து விடும்


Svs Yaadum oore
மார் 12, 2025 07:10

இது போஸ்கொ சட்டத்தில் கைதானவர்களில் ஒரு சதம்கூட இருக்காது ...இதை விட நூறு மடங்கு வெளியில் தெரியாதது .அதிகாரத்தில் உள்ள சிலருடன் தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஆசிரியர்கள், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும்போது, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க அச்சப்படுகின்றனராம் ...இந்த ஆசிரியர் மொத்தமும் திராவிடனுங்க லஞ்சத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள்.. பள்ளி கல்வி தமிழ் நாட்டில் இனி தேறாது ...


Svs Yaadum oore
மார் 12, 2025 07:05

யார் அந்த சார் ....