உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தரம் உயரும் 24 பேரூராட்சிகள்

தமிழகத்தில் தரம் உயரும் 24 பேரூராட்சிகள்

தேனி ' தமிழகத்தில் மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 17 மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை உள்ள 24 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் தலா 3 பேரூராட்சிகள், கோவை, நாமக்கல் மாவட்டத்தில் தலா 2, மற்ற 13 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயர்த்தப்பட உள்ளன. புதிதாக உருவாகும் நகராட்சிகளுடன் 24 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பேரூராட்சி, தேனியில் உத்தமபாளையம் பேரூராட்சி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Chennai budgies Chennai budgies
அக் 02, 2024 09:44

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அடிப்படை சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது பெருநகராட்சிகள் என்ற பெயரில் வரும் மாற்றங்கள் வரி உயர்வினை மட்டுமே ஏற்றும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்எந்தவித மாற்றமும்ஏற்படாது என்பதேநிதர்சனமான உண்மை .மூன்று வருடங்களுக்கு முன்புமாநகராட்சிகளாக தரம்உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளிலேயேஊழியர்களுக்கு மாநகராட்சி ஊதியம் வழங்கப்படவில்லை நிதர்சனமான உண்மை. பல நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் ஊராட்சிகளிலும் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் வாழ்வியல் நம்பிக்கை தரைமட்டமாக தமிழக அரசுபுதுப்புது அரசாணைகள் இயற்றுவது ஊழியர்களுக்கு மக்களுக்கும் கூடுதல் சுமைகளை தருமே தவிர நற்பலன்களை அல்ல. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்கும் என நம்பிக்கையில் பணிபுரிந்து வரும் தற்போது ஒப்பந்த பணியில் பணியாற்று வரும் ஒரு சாமானியன் மனக்குமுறல்


V. CHAKARAPANI
அக் 01, 2024 21:38

கோவை வடக்கு பெரியநாயக்கன்பாளையம் சிறப்புநிலை பேரூராட்சி நிலை என்ன?


Gajageswari
அக் 01, 2024 05:33

ஊராட்சி இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும்


APC.CHELLATHURAI APC.CHELLATHURAI
செப் 30, 2024 22:50

தமிழ் நாடு அரசுக்கு அன்பான வேண்டுகோள் பேரூராட்சிகளின் தரம் உயர்த்துவது போல் மக்களின் வாழ்க்கை தரமும் உயர பாடுபடுங்கள்


புதிய வீடியோ