மேலும் செய்திகள்
ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 சரிவு
2 hour(s) ago
சென்னை: த.வெ.க., - எம்.எல்.ஏ., கோபிசன் சட்டசபையில் பேசியதாவது: மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் கிளை தற்போது மதுரையில் இருப்பதால், தென்மாவட்டங்களில் இருப்போர், சென்னை வந்து செல்வதை ஓரளவுக்கு தவிர்க்க முடிகிறது. சென்னையில் மட்டுமே நிர்வாக மையங்கள் குவிந்து கிடப்பதால், தென்மாவட்ட மக்கள் நீண்ட துாரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, நிர்வாக வசதிக்காக, மதுரையை இரண்டாவது நிர்வாக தலைநகரமாக மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அங்குள்ள அனைத்து மக்களும் விரும்புகின்றனர். எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
2 hour(s) ago