உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!

போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் ரசாயனத்தில் தயாராகும் பால்பண்ணை நடத்தி வந்த தம்பதி மற்றும் ரசாயன பவுடர் விற்பனை செய்த கோமதி சங்கர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 70க்கும் மேற்பட்ட முதியவர்கள் சாப்பிட்ட கெட்டுப்போன அசைவ உணவால் புட் பாய்சன் ஏற்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கடந்த ஒரு வருடமாக நாள்தோறும் 1,000 லிட்டர் பால் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. அதுமட்டுமின்றி கெமிக்கல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளது. தென்காசி நகராட்சி மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முகமது சோதனை மேற்கொண்டார்.அப்போது ரசாயனத்தில் தயாராகும் பால்பண்ணை நடத்தி வந்த தம்பதி முப்பிடாதி 45, லட்சுமி, 40, மற்றும் ரசாயன பவுடர் விற்பனை செய்த கோமதி சங்கர் ஆகியோர் கைது செய்தனர். ரசாயனம் கலக்கப்பட்ட 300 லிட்டர் பாலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாலை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். தென்காசியில் கெமிக்கல் கலக்கப்பட்ட பால் பறிமுதல் செய்யப்பட்டது திடீர் பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

karthikeyan.P
ஜூன் 14, 2025 13:56

ஏன்டா நாதாரிங்களா திங்கறதுல கலப்படம் பண்றிங்களே ,பாவம் தான் சேரும் உங்களுக்கு


lana
ஜூன் 14, 2025 10:58

இங்க தான் சட்டம் ஒழுங்கு க்கும் சுடலை க்கும் சம்பந்தம் இல்லை. இதிலே பாலுக்கும் பாழாய் போன ஆட்சிக்கு என்ன சம்பந்தம். எவன் அப்பன் வீட்டு காசில ஆட்சி நடக்கிறது.


Raj S
ஜூன் 14, 2025 01:48

கொடுமை... அரசியல்வாதியின் ஒத்துழைப்பு இல்லாமல் இது செய்ய முடியாது... நமக்கு அந்த "சார்" யாருண்ணே மாசு மருவில்லாம சொல்ல துப்பு இல்ல, இதயெல்லாம் கண்டுபுடிக்க போறோம்... யாரவது அனுதாபிகளை பலிகடா ஆக்கிடவேண்டியதுதான்


அப்பாவி
ஜூன் 13, 2025 18:50

இது ஏற்கனவே உ.பி ல நடந்தாச்சு. அங்கிருந்து தான் இங்கேயும் பரவிடுச்சு.


அப்பாவி
ஜூன் 13, 2025 18:49

இவனுங்களை அங்கேயே வாயிலே சாணியை அடைச்சு தூக்கிப் போட்டு மிதிக்காம..


Saravana Kumar
ஜூன் 15, 2025 20:45

எப்பவும் உப்பு பாரு பீகார் பாரு–ன்னு பேசாதீங்க. தமிழ்நாட்ட பாருங்க எவ்வளவு கொலை, பணமோசடி ,கொள்ளை ...நடக்குது அத பாருங்க


Perumal Pillai
ஜூன் 13, 2025 18:28

Laboratory டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள் கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது என இவர்களுக்கு எப்படி தெரியும் ? அது என்ன கெமிக்கல் என இறுதி வரை சொல்லவே இல்லை. சகலகலா வித்தகர்கள் போலும் .


S. Neelakanta Pillai
ஜூன் 13, 2025 18:19

இவனது சொத்தை பறிமுதல் செய்ய முதலில் அதை முடக்க வேண்டும். இவர்களுக்கு கெமிக்கல் சப்ளை செய்தவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.


சிட்டுக்குருவி
ஜூன் 13, 2025 17:24

தமிழ் நாட்டில் எல்லாவகையிலும் கொலைகள் நடக்கும் கொலைநாடாக மாறிவிட்டதே. இப்போது பாரதியார் இருந்திருந்தால் என்ன பாடியிருப்பார் ."தமிழ் கொலைநாடு என்கின்ற போதினிலே துன்பம் தேள்போல கொட்டுது காதினிலே " "அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது வழக்குமொழி "அதை இப்போது அரசியல்வாதிகள் எவ்வழி மக்கள் அவ்வழி என்றால் பொருந்தும். அரசியல் வாதிகளிடத்தில் சிந்தனை சக்தி குறைந்துவிட்டது .நல்லாட்சி செய்யவேண்டும் என்பவர்கள் எல்லோரிடத்திலும் அன்பஆகவும் ,எதிர்கட்சியினரிடமும் நட்பாகவும், மரியாதை உள்ளவர்கலாகவும் இருப்பார்கள் .


karthikeyan
ஜூன் 13, 2025 14:39

அந்த 3 பெருகும் தினம் அந்த பாலை மட்டுமே 3 வேலையும் அவர்கள் சாகும் வரை குடிக்க தண்டனை வழங்க வேண்டும்.


மூர்க்கன்
ஜூன் 13, 2025 14:11

பாவம் இவரு... வியாதி முத்திடுச்சு முப்புடாதிக்கும் மு க வுக்கும் என்ன சம்பந்தம் . பாஜக ஆட்சியில் போலி தேசபக்தர்கள்னு சொல்ற மாதிரி??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை